சரித்திரம் படைத்த ஜி ஜின்பிங்.. மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்வு! உச்சத்தில் செல்வாக்கு
பெஜ்யிங்: சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நிறைவடைந்து உள்ள நிலையில், இதன் பின்னர் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
சீனாவில் நம்மைப் போல மக்களாட்சி இல்லை. அங்கு ஒற்றை ஆட்சி முறையே உள்ளதால் எதிர்க்கட்சிகளும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே அதிபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறும். அதில் தான் சீன அதிபர்கள் முறையாகத் தேர்வு செய்யப்படுவார்கள்

சீனா
அதன்படி இந்தாண்டிற்கான மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. சீனாவில் நடக்கும் மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. நேற்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பெரும்பாலும் ஜி ஜின்பிங் ஆதரவாளர்களே இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

ஜி ஜின்பிங்
இதையடுத்து ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சீனாவின் தந்தை என்று அழைக்கப்படும் மாவோவுக்கு பின் அங்குச் செல்வாக்கு மிக்க தலைவராக ஜி ஜின்பிங் தன்னை தானே நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவர் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியுள்ளார். பல ஆண்டுகளாகக் கட்சிக்கு முதல் இடம் என்ற நிலையில் இருந்து சீன ஒற்றை நபரை நோக்கிச் செல்ல தொடங்குவதை இது காட்டுகிறது.

என்ன நடந்தது
கம்யூனிஸ்ட் மாநாட்டின் இறுதியில் 200 பேரைக் கொண்ட சென்டிரல் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. அவர்கள் சீன அரசியலில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பான ஸ்டாண்டிங் கமிட்டியை தேர்வு செய்தனர். இதன் தலைவராகவே ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த ஸ்டாண்டிங் கமிட்டி மற்றும் சென்டிரல் கமிட்டி என இரண்டிலுமே தனது ஆதரவாளர்கள் அதிகம் இருக்கும்படி ஜி ஜின் பிங் பார்த்துக் கொண்டார்.

எதிர்ப்பாளர்கள் இல்லை
கடந்த 2012 சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல்முறையாக அதிபரானார். அப்போது முதலே அதிபர் பதவியில் தொடரவே காய்களை நகர்த்தினார். ஊழல் ஒழிப்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து எதிர்ப்பாளர்களைக் கட்சியில் இருந்தே நீக்கினார். அதேபோல ஒருவர் இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது என்ற விதிமுறைகளையும் 2018இல் அவர் சத்தமில்லாமல் நீக்கினார். இதன் மூலம் சாகும் வரை அதிபர் பதவியில் இருக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார்.

உலகிற்குச் சீனா தேவை
மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பின் பேசிய ஜி ஜின்பிங், "உலக நாடுகள் இல்லாமல் சீனாவால் வளர்ச்சி அடைய முடியாது. அதேபோல உலகிற்கும் சீனா தேவை.. 40 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்ட கால சமூக ஸ்திரத்தன்மை அடைந்து உள்ளது. எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்" என்றார்.

எதிர்ப்பாளர்கள் இல்லை
சீனாவில் மாவோவுக்கு பின் யாரும் இந்த அளவுக்குச் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்தது இல்லை. கடந்த 2012 சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல்முறையாக அதிபரானார். அப்போது முதலே அதிபர் பதவியில் தொடரவே காய்களை நகர்த்தினார். ஊழல் ஒழிப்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து எதிர்ப்பாளர்களைக் கட்சியில் இருந்தே நீக்கினார்.

அடுத்து என்ன
அதேபோல ஒருவர் இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது என்ற விதிமுறைகளையும் 2018இல் அவர் சத்தமில்லாமல் நீக்கினார். இதன் மூலம் சாகும் வரை அதிபர் பதவியில் இருக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார். இதற்கு சட்டப்படி தேவையான மாற்றங்களை அவர் மிக விரைவில் செய்யத் தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications