For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி அரேபிய விமான நிலையத்தை தாக்க வந்த ஏவுகணை இடைமறித்து அழிப்பு.. பரபரப்பு!

சவுதி அரேபிய விமான நிலையத்தை தாக்க வந்த ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபிய விமான நிலையத்தை தாக்க வந்த ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையில் கூட்டுப்படைகள் ஏமனில் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதனால் சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சவுதி அரேபியாவை பழிவாங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஏமன் கிளர்ச்சியாளர்கள்

ஏமன் கிளர்ச்சியாளர்கள்

இந்நிலையில் கிளர்ச்சியாளார்கள் ரியாத்தை குறிவைத்து ஏவுகணையை வீசியுள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து, புர்கான் 2 எச் என்கிற ஏவுகணையை வீசி உள்ளனர்.

இடைமறித்து அழிப்பு

இடைமறித்து அழிப்பு

இதனை கண்டறிந்த சவுதி அரேபியா ராணுவம் அந்த ஏவுகணையை நாடுவானில் இடைமறித்தது அழித்தது. அப்போது பெரும் சத்தத்துடன், சிதை பொருட்கள் விமான நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்தது.

அசம்பாவிதம் தவிர்ப்பு

அசம்பாவிதம் தவிர்ப்பு

இதனால் விமான நிலையம் அமைந்து உள்ள பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சவுதி பாதுகாப்பு படை சரியான நேரத்தில் ஏவுகணையை இடைமறித்து அழித்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அமெரிக்கா உருவாக்கியது

அமெரிக்கா உருவாக்கியது

இந்த தாக்குதலால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் ஏற்படவில்லை என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை சவுதி அரேபியா இடைமறித்து அழிக்க பயன்படுத்திய ஏவுகணை அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Yemeni rebels on Saturday targeted an airport in Saudi Arabia's capital with a ballistic missile, according to Yemen's Houthi-controlled Defense Ministry. But the missile was intercepted over northeast Riyadh, the Saudi Ministry of Defense said in a statement carried on government-backed Al-Arabiya television.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X