இந்தியாவுக்கு எமனாகும் அரபு நாடு? எங்களை இனி தாக்கினால் சவுதி அரேபியா வரும் - அறிவித்த பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே கையெழுத்தான பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இனி இந்தியா தாக்கும்போது பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியா உதவுமா? என்ற கேள்விக்கு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பதிலளித்துள்ளார். ‛‛ஆம், கண்டிப்பாக.. இந்தியா எங்களை தாக்கினால் சவுதி அரேபியா உதவிக்கு வரும்'' என்று கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்கு சென்றார். சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி பாகிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலும் சவுதி அரேபியா தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்தவொரு தாக்குதலையும், பாகிஸ்தான் தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும். சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். அதேபோல் சவுதி அரேபியாவுக்கு தேவையான அணுஆயுதங்களையும் பாகிஸ்தான் வழங்கும். இந்த ஒப்பந்தம் தான் பேசும் பொருளாகி உள்ளது.
இதனால் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்கும்போது சவுதி அரேபியா அந்த நாட்டுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. சவுதி அரேபியா நம்முடன் நல்ல நட்பில் உள்ளது. இதனால் சவுதி அரேபியா, நமக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் ராணுவ துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஜியோ சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது கவஜா ஆசிப் கூறுகையில், ‛‛பாகிஸ்தானை இனி இந்தியா தாக்கினால் அந்த விவகாரத்தில் சவுதி அரேபியா தலையீடுமா? '' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛ஆம், கண்டிப்பாக.. இதில் எந்த சந்தேகமும் வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி சவுதி அரேபியா அல்லது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் எங்களின் இருநாடுகளும் சேர்ந்து செயல்படுவோம்'' என்றார். பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்பின் இந்த பேட்டி நம் நாட்டுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications