தலைக்கேறிய காமம்.. சவப்பெட்டியை உடைத்து.. மண்டை ஓட்டை வெளியே எடுத்து.. 21 வயது இளைஞன் பகீர்
சவப்பெட்டியை உடைத்து மண்டை ஓட்டிற்கு முத்தம் தந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
பெய்ஜிங்: சீனாவில் இளைஞர் ஒருவர் 700 ஆண்டுகள் பழமையான கல்லறையை தோண்டி சவப்பெட்டியை உடைத்து உள்ளே இருந்த மண்டை ஓட்டிற்கு முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அவர் சமூக வலைத்தளங்களில் லைவாக ஒளிபரப்பியுள்ளார்.
டிக்டாக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதற்காக மனிதர்கள் தினம் தினம் புதிய யுக்தியையும், வழிமுறையையும் பரிசோதித்து பார்க்கின்றனர். பிராங்க் வீடியோவில் தொடங்கி, வேகமாக பைக், கார் ஒட்டி அதனை லைவாக பதிவிடுவது வரை இந்த பிரபலமடைவதற்காக ஆசை வளர்ந்திருக்கிறது. இதில் சில விஷயங்கள் பொதுமக்களையும், பல விஷயங்கள் வீடியோவை எடுக்கும் நபர்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது.
இந்த வரிசையில் சீனாவில் ஒரு சர்ச்சை சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான மண்டை ஓட்டை தோண்டி எடுத்து அதற்கு இளைஞர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அவர் லைவ்வாக சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். சீனாவின் தென்மேற்கு பகுதியில் குய்சோ மாகாணத்தில் பழங்கால கல்லறை தோட்டம் ஒன்று இருக்கிறது. இது ஒரு காலத்தில் சீனாவை ஆண்ட 'மிங்' வம்சத்தை சேர்ந்தவர்களுடையதாகும்.

700 ஆண்டுகள் பழமையானது
கிபி 1368 முதல் கி.பி 1644ம் ஆண்டு வரை 'மிங்' வம்சத்தினர் சீனாவை ஆட்சி செய்து வந்தனர். இந்த காலத்தில் அரச குடும்பத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் குய்சோ மாகாணத்தில் உள்ள 'குவோலி குகைகளில்' புதைக்கப்பட்டது. சீனாவின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் இந்த கல்லறையை அந்நாடு தொல்லியல் பொக்கிஷமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த பகுதியில் 21 வயது 'சென்' எனும் இளைஞர் ஒருவர் வந்திருக்கிறார். வந்தவர் உள்ளூர்காரர்களிடம் கல்லறை குறித்து விசாரித்திருக்கிறார்.

கல்லறை தோட்டம்
பின்னர் கல்லறை தோட்டத்தை சுற்றி பார்ப்பதை போல வந்து யாருக்கும் தெரியாமல் குகைக்குள் இருந்து சவப்பெட்டி ஒன்றை தோண்டி எடுத்திருக்கிறார். இதற்கு இவரது 2 நண்பர்கள் உதவி செய்திருக்கின்றனர். இப்படி தோண்டி எடுத்த சென், அதனை உடைத்து உள்ளே இருந்த எலும்புகூடுகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்திருக்கிறார். பின்னர் மண்டை ஓட்டை மட்டும் பிடித்து அதற்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் முழுவதும் 'Anmo' சமூக வீடியோ தளத்தில் லைவாக பதிவேற்றிருக்கிறார். இதனை லைவில் பார்த்த சிலர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

புகார்
இதற்கிடையில் உள்ளூர் மக்கள் சிலர் சென்னின் நடவடிக்கையை பார்த்து கூச்சலிட்டுள்ளனர். பின்னர் மக்கள் அனைவரும் சேர்ந்து 'சென்'-ஐ பிடித்து கடுமையாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சென் கை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினர் கைது செய்வதற்கு முன்னர் ஊர் மக்களிடம் சென் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்த வந்த நிலையில், சென்னின் நடவடிக்கைக்கு நீதிபதிகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.

கைது
இந்த சம்பவம் நடந்தது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம் என்றும், கல்லறை திருடர்களுக்கு கூட சவப்பெட்டியை திறக்கக்கூடாது என்று தெரியும், ஆனால் அதையும் மீறி இந்த இளைஞர் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பணம் சம்பாதிப்பதற்காக இது போன்று வரலாற்று சிறப்புமிக்க இடத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று கூறி 9 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications