ஜிக்கா பாதிப்புள்ள நாடுகளில் பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும்: ஐ.நா.
ஜெனிவா: ஜிக்கா வைரஸ் பரவும் நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தவும், கருவை கலைக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்ப்பிணிகளை வைரஸ் தாக்கினால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு அது சிறிய தலையுடன் பிறக்கிறது. இதனால் ஜிக்கா வைரஸ் பரவும் நாடுகளில் உள்ள பெண்கள் கருத்தரிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜிக்கா வைரஸ் பரவும் நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தவும், கருவை கலைக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் சிசில் பாலி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜிக்கா வைரஸ் பயத்தால் பெண்களை கருத்தரிக்க வேண்டாம் என்று தென் அமெரிக்க நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால் பெண்கள் கருத்தரிக்காமல் இருக்கத் தேவையானதை அளிக்காமல் அவர்களை எப்படிக் கேட்டுக் கொள்ள முடியும்? என்றார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஜெய்த் ராத் அல் ஹுசைன் கூறுகையில்,
கருத்தடை சாதனங்கள், கருகலைப்புக்கு எதிராக உள்ள நாடுகளில் எப்படி பெண்களை கருத்தரிக்காமல் இருக்குமாறு கூற முடியும்? பாலியல் வன்முறை அதிகம் உள்ள சூழலில் வசிக்கும் பெண்களை கருத்தரிக்காமல் இருக்குமாறு அரசுகள் கூறுவது நிஜத்தை புறக்கணிப்பது ஆகும் என்றார்.
பெண்களை கருத்தரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய நாடுகளில் பலவற்றில் கருகலைப்புக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications