For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூர்யாவை விடாமல் துரத்தும் வன்னியர் சங்கம்! சிதம்பரம் நீதிமன்றத்தில் பதிவான வழக்கு!

Google Oneindia Tamil News

சிதம்பரம்: ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியவை மீது வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினரின் குற்றச்சாட்டு. ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனாக காட்டப்படுகிறவர் எஸ்.ஐ.குருமூர்த்தி.

ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன?ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன?

வன்னியர் எதிர்ப்பு ஏன்?

வன்னியர் எதிர்ப்பு ஏன்?

ஆனால் உண்மைச் சம்பவத்தில் எஸ்.ஐ. பெயர் அந்தோணிசாமி. இந்த பெயர் திட்டமிட்டே மாற்றப்பட்டு குருமூர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது; அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் உள்ள காலண்டரும் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என வன்னியர் சங்கம் குற்றம்சாட்டி இந்த திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாமகவினரும் பல இடங்களில் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அன்புமணி, வன்னியர் சங்கம்

அன்புமணி, வன்னியர் சங்கம்

இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா அன்புமணியும் நடிகர் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பினார். நடிகர் சூர்யா ரூ5கோடி நஷ்ட ஈடு தரக் கோரி வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எந்த ஒரு விருதையும் மத்திய அரசு வழங்கக் கூடாது எனவும் வன்னியர் சங்கம் கடிதம் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யா, ஞானவேல்

நடிகர் சூர்யா, ஞானவேல்

இதற்கு நடிகர் சூர்யா விளக்கம் தந்ததுடன் அக்னி கலச காலண்டரும் திரைப்படத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் இயக்குநர் ஞானவேலும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் ஜெய்பீம் சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

Recommended Video

    Surya மன்னிப்பு கேட்க வேண்டும் | Jai Bhim Vanniyar Issue | Oneindia Tamil
    வன்னியர் சங்கம் வழக்கு

    வன்னியர் சங்கம் வழக்கு

    இந்த நிலையில் சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி ஜெய்பீம் படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அருள்மொழி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Vanniyar Sangam President Pu.Tha. Arulmozhi has filed defamation case against Actor Suriya and Director Ganavel for Jai Bhim movie.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X