தளபதி, தளபதி ஐயா.. முதல்வர் கான்வாயை நிறுத்திய 11 வயது சிறுமி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திற்கு வந்த முதல்வரின் காரை நிறுத்திய ஒரு சிறுமி அவருக்கு புத்தகத்தைப் பரிசளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் சமையல் காண்ட்ராக்டர் இளையராஜா திமுக அபிமானி. காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த முதல்வரை காண்பதற்காக தனது மகள் திவ்யா, தீபலட்சுமி ஆகியோருடன் காந்தி சாலையில் நின்று இருந்தார்.
முதலமைச்சரின் கான்வாய் காந்தி சாலையில் வந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் இளையராஜாவின் 11வயது இளைய மகள் தீபலட்சுமி தன் கையில் இருந்த புத்தகத்தை காண்பித்து தளபதி, தளபதி, என கூச்சலிட்டாளர்.

ஸ்டாலின்
இதனை கவனித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை நிறுத்தி சிறுமியை அருகில் அழைத்து அவள் பரிசளித்த புத்தகத்தை பெற்றுக் கொண்டார். சிறுமியின் பெயரை கேட்டறிந்து தீபலக்ஷ்மி என கூப்பிட்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு மாலை அணிவிக்க சென்றார்.

முதல்வர்
கான்வாயில் காரில் வந்த முதல்வரை கூப்பிட்டு புத்தகம் பரிசளித்த சிறுமியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்த்து
முதலமைச்சருக்கு புத்தகம் பரிசளித்த சிறுமியின் செயலை அக்கம்பக்கத்தினர் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.

சிறுமி உற்சாகம்
இதுகுறித்து உற்சாகம் பொங்க பேசிய சிறுமி தீபலட்சுமி,
தனது தந்தை தாயிடம் முதல்வர் காஞ்சிபுரம் வருவதாக கூறியதைக் கேட்டு அவருக்கு பரிசு அளிக்க விரும்புவதாக கேட்டு புத்தகத்தை வாங்கிக்கொண்டு சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்தோம்.

புத்தகம்
அப்போது முதல்வரின் கார் வருவதை பார்த்து உற்சாக மிகுதியால் புத்தகத்தைக் காட்டி அழைத்தேன். உடனடியாக காரை நிறுத்தி அழைத்து புத்தகத்தை முதல்வர் பெற்றுக் கொண்டது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக சிறுமி தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications