பஸ் நிலையத்தில் பையில் கிடந்த வெடிகுண்டு... திடீர் பரபரப்பு... காஞ்சிபுரத்தில் திக்.. திக்.. திக்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் வேட்புமனு தாக்கலும், ஒரு பக்கம் தீவிர பிரசாரமும் மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்திலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று மாலை அந்த கடைகளுக்கு வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த பையை அங்கேயே வைத்து சென்று விட்டார். நீண்ட நேரம் கழித்து அந்த பையை கடைக்காரர்கள் பார்த்தபோது அதில் வயர்கள் சுற்றப்பட்ட நிலையில் நாட்டு வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதனை மழைநீர் கால்வாயில் வைத்தனர். தொடர்ந்து காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்னர் அங்கு வந்த போலீசார் நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினார்கள். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினார்கள். அந்த பையை வைத்து சென்றவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications