36வது ஆள் தவெக தலைவர் விஜய்! ஏன் போலீஸ் இப்படி பன்றாங்கனு தெரியல! புலம்பும் பரந்தூர் பகுதி மக்கள்!
காஞ்சிபுரம்: தமிழக அரசியல் களத்தில் குதித்த பிறகு முதல் முறையாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை இதுவரை 35 தலைவர்கள் சந்தித்திருக்கும் நிலையில் 36வதாக வந்திருக்கும் விஜய்க்கு மட்டும் கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம் ,அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர். இந்த காரணத்தை முன்வைத்து புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது என கூறி எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு , தமிழக அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.
ஏகனாபுரம் கிராமத்தைப் போல் அதனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். ஒப்பாரிப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என 900 நாட்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் பல வடிவங்களை சந்தித்து வருகிறது.
விவசாயத்தை அழிக்கக் கூடாது, தங்களுக்கு விமான நிலையம் வேண்டாம், விவசாயத்தை நம்பி தான் நாங்கள் பிழைத்து வருகிறோம், இத்தனை நாட்கள் போராடியும் முதலமைச்சர் தங்களை கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிலையில் பரந்தூர் மக்களை சந்திக்கப் போகிறார் விஜய் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது.
ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என விமர்சிக்கப்பட்ட விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்திக்கிறார் என அறிவிக்கப்பட்டதோடு அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தது. தொடர்ந்து காவல்துறை அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று பரந்தூர் மக்களை சந்தித்துள்ளார் விஜய்.
அதே நேரத்தில் விஜய் வருகையை கேட்டு ஏராளமான மக்கள் திரள்வார்கள் என்பதால் திருமண மண்டபத்தில் சந்திக்கலாம் என காவல்துறை அனுமதி கொடுத்தது. இதை அடுத்து பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பேருந்து மூலம் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் விஜயை பார்க்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பரந்தூர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து ஆதார் கார்டு சோதனை செய்யப்பட்டு 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமே அப்பகுதிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் விஜய் கட்சியின் பொருளாளர் ஆன வெங்கட்ராமனை பரந்தூருக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. விஜய் கட்சி சார்பில் வழங்கப்பட்ட பட்டியலில் வெங்கட்ராமனின் பெயர் இல்லை எனக் கூறி போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்தான் விஜய் வருகை குறித்த கடிதத்தை காஞ்சிபுரம் காவல்துறைக்குக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து ஆங்காங்கே போலீசார், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பரந்தூர் மக்கள் இரண்டு ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஏற்கனவே பல தலைவர்கள் பொதுமக்களை சந்தித்து இருக்கின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி, அமமுக டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மே 17 திருமுருகன் காந்தி மற்றும் பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் 35 பேர் அப்பகுதி மக்களை சந்தித்து இருக்கிறார்கள்.
36ஆவது நபராக காவல்துறை அனுமதி அளித்தவர்கள் பட்டியலில் இருக்கும் விஜய் மக்களை சந்திப்பதற்கு மட்டும் ஏன் இவ்வளவு கெடுபடி என கேட்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் இதுவரை ஆயிரக்கணக்கானோர் அப்பகுதி மக்களை சந்தித்திருக்கும் நிலையில் விஜய்க்கு மட்டும் அதிக கெடுபிடி காட்டுவதாகவும், போலீசார் ஒவ்வொருவரையும் குற்றவாளிகள் போல சோதனை செய்வது அனுமதிக்க முடியாது என மிரட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்.
-
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications