அதிரடி.. முதல்வர் ஸ்டாலின் மீது விமர்சனம்.. காஞ்சி வரதராஜ பெருமாள் மணியக்காரர் மீது பாய்ந்த வழக்கு!
காஞ்சிபுரம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குறித்து தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்ததாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மணியக்காரர் மீது அதிரடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் தான் அத்திவரதர் இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்து தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு அத்திவரதர் கோவிலுக்கு வருவார்.

இதையடுத்து அத்திவரதரை 48 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த வேளையில் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த கோவிலில் மணியக்காரரராக கிருஷ்ணகுமார் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தான் மணியக்காரர் கிருஷ்ணகுமார் கடந்த மாதம் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குறித்து தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பார்த்திபன் சார்பில் விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்ட்டது.
புகாரில்,‛‛காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில மணியக்காரர் பணி செய்து வருபவர் கிருஷ்ணகுமார். இவர் விமர்சனம் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் குறித்து தரக்குறைவாக பேசி உள்ளார். மேலும் மிரட்டும் தொனியிலும் பேசி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகார் பற்றி விசாரணை நடத்திய விஷ்ணு காஞ்சி போலீசார் மணியக்காரர் கிருஷ்ணகுமார் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications