அதிசயம்.. ஆனால் உண்மை.. பாலாற்றில் 40 ஆயிரம் கனஅடி நீர்.. பாய்ந்தோடும் வெள்ளம்.. முக்கிய அலார்ட்
காஞ்சிபுரம்: பாலாற்றில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Recommended Video
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ளள நந்தி மலையில் உருவாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 93 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆந்திராவில் நுழைகிறது.
ஆந்திராவில் 33 கிலோமீட்டர் தூரம் பயணித்து பின்னர் தமிழகத்தின் வாணியம்பாடி பகுதியில் நுழைகிறது. தமிழகத்தில் 222 கிலோமீட்டர் தூரம் பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அருகே வயலூர் கிராமப்பகுதியில் கடலில் கலக்கிறது.

வடிகால்
பெயருக்கு ஏற்றபடி செழிப்பான பாலாறு. தமிழகத்திற்கு மட்டும் வரவே வறாது. ஏனெனில் ஆந்திராவில் ஏராளமான தடுப்பணைகள் காரணமாக வெள்ளம் வந்தால் வடிகாலாக மட்டுமே வரும். மற்றபடி பல ஆண்டுகளாக பாலாறு வறண்டுதான் காணப்படுகிறது.

வெள்ளம்
நிவர் புயல் கொடுத்த பெருமழையால் இப்போது பாலாறு உயிர் பெற்றுள்ளது. தற்போது பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகள் வேகமாக நிரம்பின.. இதன் காரணமாக, காவேரிப்பாக்கம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் உள்ள பெரும்பாக்கம், முசரவாக்கம், விஷார், செவிலி மேடு, தேனம்பாக்கம், விப்பேடு, வாலாஜாபாத், வில்லிவாக்கம், உள்ளிட்ட 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் மகேஸ்வரி "காவேரிப்பாக்கம் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளதால் பாலாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தினார்.

முன்னெச்சரிக்கை
கிராம மக்கள் தங்கும் வகையில், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள், சமுதாயகூடங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவையான அடிப்படை வசதிகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications