காஞ்சியில் அத்தி வரதர் வைபவம்... ரவிசங்கர் பிரசாத், தமிழிசை தரிசனம்
காஞ்சிபுரம் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர், காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலில் தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த திங்கட்கிழமையன்று அத்தி வரதர் வைபவம் துவங்கியது. 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், அத்தி வரதரை தரிசிக்க, உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

கடந்த 6 நாட்களில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 7ஆம் நாளான இன்று, பெருமாளுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி, தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விடுமுறை தினம் என்பதால், ஆந்திரா,கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, கோயிலுக்கு வந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டார். பெருமாளை வணங்கி அவர் ஆசிபெற்றார். இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
40 வருடங்களுக்கு ஒருமுறை 48 நாட்கள் காட்சியருளும்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) July 7, 2019
காஞ்சிபுரம் ஶ்ரீஆதி அத்திவரதர் வைபவ தரிசனத்தில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்தேன்...மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் அவர்களும் ஶ்ரீஆதி அத்திவரதரை தரிசனம் செய்தார்கள்... @rsprasad pic.twitter.com/b2Sx17I7tF
40 வருடங்களுக்கு ஒருமுறை 48 நாட்கள் காட்சியருளும் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவ தரிசனத்தில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்தேன். மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் அவர்களும் அத்திவரதரை தரிசனம் செய்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications