காஞ்சியில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்துக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் , வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து காஞ்சி பகுதியில் கள ஆய்வு செய்த போது காஞ்சி சிவன் கோவில் அருகே வயல்வெளியில் பலகை கல்வெட்டு ஒன்று இருப்பதாக பாலூர் ஜெய் தந்த தகவலின் பெயரில் ஆய்வு செய்யப்பட்டது.
வயல்வெளியின் ஊடே பாதி புதைந்த நிலையில் காணப்பட்ட அப்பலகை கல்வெட்டைச் சுத்தம் செய்து பார்க்கையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லின் முன்புறம் முதல் பாதியில் நிதானத்தைக் குறிக்கும் சூலம் , அதன் அருகே இருபுறமும் விளக்கும் செதுக்கப்பட்டு மேலே சந்திரனும் சூரியனும் காட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 13 வரியும் கல்லின் பின்புறம் 15 வரியும் அடங்கிய கல்வெட்டு கண்டறியப்பட்டது.

கல்வெட்டு செய்தி
கல்வெட்டு செய்தி : ஸ்வஸ்தஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டானது ராஜராஜ சோழனின் 14 ஆம் ஆட்சியாண்டில் காஞ்சியில் உரையும் ஆளுடையார் கரைகண்டீசுவரமுடைய நாயனார்க்கு நில தானம் வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது.

கொல்லை
பிருத்திவிகங்கனான நிலைட்ட பெருமான் என்பவர் கரைகண்டீசுவரம் உடையார் கோயிலுக்கு வடக்கில் உள்ள கொல்லையைத் தேவதானமாகத் தந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. இத்தானம் சந்திர சூரியர் உள்ளவரைச் செல்லும் என்றும் அதனை பாழ்படுத்துபவர் கங்கையில் உள்ள பசுவைக் கொன்ற பாவத்திற்க்கு ஆளாவார்கள் என்றும் குறிப்பிடபடுபட்டுள்ளது.

சோழனின் கல்வெட்டு
இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இது 13ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியின் கடைபகுதியில் கி.பி 1216-1246 வரை ஆண்ட மூன்றாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு என்பது உறுதியாகிறது. அவனின் பதினான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டு என்பதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி 1230 ஆகும்.

கரைகண்டேஸ்வரர் கோயில்
மேலும் தற்சமயம் உள்ள கரைகண்டேஸ்வரர் கோவில் கட்டுமானம் பிற்காலத்தைச் சேர்ந்த நாயக்கர் காலத்தியது. அக்கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதும் இல்லாத நிலையில் இக்கல்வெட்டு மூலம் இக்கோவில் 800 வருடங்களுக்கு மேல் பழமையான சோழர் காலத்துக் கோவில் என்பது உறுதியாகிறது. மேலும் இக்கோவிலில் உள்ள சாமி பெயர் சோழர் காலத்தில் ஆளுடையார் கரைகண்டீஸ்சுவரமுடைய நாயனார் என்று வழங்கப்பட்டுள்ளதை நம்மால் அறியமுடிகிறது.

ராஜராஜன் ஆட்சி
மூன்றாம் ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் சோழ பேரரசு பல்வேறு தாக்குதல்களாலும் , அரசியல் சூழல்களாலும் வலிமை குன்றி இருந்த நிலையிலும் , கோவில்களுக்கான தானம் தொடர்ந்து நடைபெற்றுள்ளதை நம்மால் அறிய முடிகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டைக் கிராம மக்கள் முறையாகப் பராமரித்து வந்தால் இக்கோவிலின் வரலாறு பாதுகாக்கப்படும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications