இனிமேல் அதிமுகவை திட்ட வேண்டாம்.. எல்லாம் "அவங்க" பார்த்துப்பாங்க! பரபரக்கும் உதயநிதி ஸ்டாலின்
காஞ்சிபுரம்: திமுக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
Recommended Video
காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் வெகு விமர்சியாக கலைஞர் திடலில் நடைபெற்றது.
காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

திமுக
மேலும், இந்த விழாவில் திமுக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், 2083 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொற்கிழிகளைப் பரிசாக வழங்கினார். மேலும், சுமார் 400க்கும் மேற்பட்ட நலிவுற்ற பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

உதவி திட்டங்கள்
இது மட்டுமின்றி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த 188 அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுக்குக் கல்வி ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது. மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்த திமுகவினருக்கு நிதியுதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சின்னவர்
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "என்னைச் சின்னவன் என்றே கூப்பிடுங்கள். உங்களுடைய உழைப்பு மற்றும் அனுபவத்துடன் ஒப்பிடும்போது நான் சின்னவன் தான். எனவே, என்னைச் செல்லமாகச் சின்னவன் என்றே கூப்பிடலாம். என்னைச் சின்னவரே என்று கூறினாலே பல விமர்சனங்கள் எழுகிறது. பல பேர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள். ஆகையால் என்னை நீங்கள் சின்னவன் என்றே கூப்பிடலாம்.

அதிமுக
இனிமேல் அதிமுகவை நாம் திட்டவோ, விமர்சிக்கவோ அவசியமே இல்லை. கடந்த சில நாட்களாகவே அவர்களுக்குள்ளாகவே அவர்களைத் திட்டிக்கொண்டு கல் எறிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் அதிமுகவிற்கு எனத் தனியாக வரலாறு எல்லாம் கிடையாது. நமது திமுக இயக்கத்திற்கு வரலாறு இருக்கின்றது, அந்த வரலாற்றுக்குச் சாட்சியாக திமுக மூத்த முன்னோடிகளாக நீங்கள் உள்ளீர்கள்.

வழிநடத்துங்கள்
இல்லையென்றால் நீங்கள் இல்லையென்றால் திமுக கிடையாது. எனவே என்னைப் போன்ற இளைஞர்களை, கழகத்தின் மூத்த முன்னோடிகள் கைகளைப் பிடித்து வழி நடத்திட வேண்டும். நீங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும். ,உங்களது வழிகாட்டுதலோடு நாங்கள் வழி நடக்கின்றோம்" என்று உதயநிதி தெரிவித்தார்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications