நான் கல்லை காட்டினேன்! ஆனா எடப்பாடி பல்லை காட்டிக்கொண்டு இருந்தாரே.. போட்டோவை கையில் எடுத்த உதயநிதி
காஞ்சிபுரம்: லோக்சபா தேர்தலுக்காகக் காஞ்சிபுரத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்,
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்குக் குறைவாகவே இருப்பதால் தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

அதன்படி காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராகச் செல்வம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
உதயநிதி: காஞ்சிபுரத்தில் பேசிய உதயநிதி, "பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார். இதுவரை அவர் தமிழ்நாட்டிற்கு எதாவது ஒரு நல்ல விஷயத்தையாவது செய்துள்ளாரா.. 2019இல் இங்கே மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுகிறேன் என்று சொல்லி அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். நேற்று எடப்பாடி பழனிசாமி திருச்சியில் என்னைப் பற்றிப் பேசியுள்ளார்.
சும்மா உதயநிதி கல்லைக் கல்லை காட்டிக் கொண்டு இருக்கிறார் என்று எடப்பாடி சொல்லியுள்ளார்" என்ற சொன்ன உதயநிதி செங்கல்லை எடுத்துக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "இது தான் மோடி, எடப்பாடி, அமித்ஷா ஆகியோர் 2019இல் அடிக்கல் நாட்டும் போது வைத்த அந்த கல்.. அங்கே அவர்கள் வைத்தது இந்த ஒரு கல்லை மட்டும் தான். அதையும் நான் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். நீங்க அங்கே மருத்துவமனையைக் கட்டும் வரை நான் திருப்பி தர மாட்டேன். நிச்சயம் தர மாட்டேன்.
போட்டோ: எடப்பாடி என்ன சொல்கிறார். உதயநிதி மாற்றிப் பேச வேண்டும். திரும்ப திரும்ப கல்லை எடுத்துப் பேசுகிறார். நானாவது எய்ம்ஸ் கல்லைத் தான் காட்டினேன். இங்கே ஒருவர் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார் பாருங்க" என்று சொன்ன உதயநிதி 2019 எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, அப்போதைய முதல்வர் எடப்பாடி ஆகியோர் இருந்த படத்தை எடுத்துக் காட்டினார்.
பல்லைக் காட்டிக் கொண்டு இருந்தாரே: மேலும் உதயநிதி, "நானாவது கல்லைத் தான் காட்டினார். ஆனால் எடப்பாடி பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார். கல்லை வைத்து விட்டு பல்லைக் காட்டி போட்டோ தான் இது. இப்படி இருந்துவிட்டு எடப்பாடி இப்போது என்னை ஸ்கிரிப்ட்டை மாற்றிப் பேசுங்கள் என்கிறார். நான் ஏன் ஸ்கிரிப்ட்டை மாற்ற வேண்டும். நான் ஏன் எனது கொள்கையை மாற்ற வேண்டும். எங்களின் ஒரே கொள்கை இதுதான்.
எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். நீட் தேர்வு வேண்டாம். மாநில சுயாட்சி வேண்டும்.. இதுவே எங்கள் கொள்கை.. என்னால் உங்களை போல நேரத்திற்கு தகுந்தபடி ஆளுக்கு தகுந்தபடி ஸ்கிரிப்ட்டை மாற்றி பேச முடியாது.
மாற்றி மாற்றி பேச மாட்டோம்: நீங்கள் ஓபிஎஸ்ஸிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள், சசிகலாவிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள், மோடியிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள். தீபாவை பார்த்தால் ஒரு மாதிரி பேசுவீர்கள்.. தீபாவின் டிரைவரை பார்த்தால் ஒரு மாதிரி பேசுவீர்கள்.. உங்களை போல மாற்றி மாற்றி பேச திமுகக்காரன் ஒன்றும் பச்சோந்தி இல்லை. நான் கருணாநிதியின் பேரன். நான் எனது கொள்கைகளை தான் பேசுவேன். மாநில உரிமைகளை மீட்க தேவையானதை செய்வேன்" என்று அவர் மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications