சாவு பயம் காட்டிய சவர்மா! கடைகளில் அதிகாரிகள் ரெய்டு.. கேரள மாணவி மரணத்தை அடுத்து தமிழகத்தில் அதிரடி
காஞ்சிபுரம்: கேரளாவில் உள்ள உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Recommended Video
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் பள்ளி மாணவ, மாணவிகள் குழுவாக சென்று சவர்மா வாங்கி சாப்பிட்டனர்.
அதன் பின்னர் சுமார் 15 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவி மரணம்
பின்னர் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆம் படிக்கும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் உணவகத்தில் சாப்பிட்ட சவர்மாதான் இதற்கு காரணம் என்பது தெரியவந்தது. இவர்களில் 14 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் ஆய்வு
இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் இரண்டு குழுவாக தலா 5 பேர் கொண்ட குழு பிரிந்து சென்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள ரங்கசாமி குளம், காவலன் கேட், கீரை மண்டபம், காமாட்சி அம்மன் சன்னதி வீதி உள்ளிட்ட 13 இடங்களில் இயங்கும் சவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

தரம் குறித்து பரிசோதனை
சவர்மா விற்கும் கடைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கோழி கறியை அவர்கள் ஆய்வு செய்தனர். பழைய கோழி கறியை பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி தரத்தை கண்டறிந்து வருகின்றனர்.

10 கடைகளுக்கு அபராதம்
கடைகளில் பாதுகாப்பில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்தி சவர்மா தயாரிக்கும் 10 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் இயங்கும் கடையில் பழைய கோழி கறியை பயன்படுத்தியதாக வந்த புகாரின் பேரில் மாதிரிகளை சேகரித்து சென்னை கிண்டியில் ஆய்வுக்காக அனுப்பி இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications