தாறுமாறாக ஓடிய பைக்.. விபத்தில் 4 பேர் பலி.. சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பியபோது சோகம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: அத்திவரதரை கும்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

ராணிப்பேட்டையை அடுத்த செட்டித்தங்கள் பகுதியை சேர்ந்தவர் இளம்பருதி. ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சப்ளை செய்வதுதான் இவரது வேலை.

Four dead in Road Accident near Vellore District

நேற்று லீவு என்பதால், காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க குடும்பத்துடன் கிளம்பினார். மனைவி சரஸ்வதி, மகன் தனுஷை டூவீலரில் உட்கார வைத்து காஞ்சிபுரம் சென்றார்.

அத்திவரதரை கும்பிட்டு விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்கள். காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே வந்து கொண்டிருந்த போது, காளிமுத்து என்ற முதியவர் அங்கு ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பைக்கில் சென்ற இளம்பரிதி, காளிமுத்து மீது மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது அதி பயங்கரமாக மோதியது.

இதில் பைக்கில் சென்ற 3 பேர் மற்றும் காளிமுத்து உட்பட நான்கு பேருமே படுகாயமடைந்தனர். பொதுமக்கள் விரைந்து சென்று இவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டும், வழியிலேயே இளம்பருதி தனுஷும், சிகிச்சை பலனின்றி சரஸ்வதி, காளிமுத்துவும் பரிதாபமாக உயிரிழந்தனர் விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+