குளத்துக்குள் காதல் ‘வளர்த்த’ ஜோடி! குண்டுகாட்டாய் தூக்கி சென்ற கும்பல்..கதறித் துடித்த காதலி! ஷாக்!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் குண்டு குளம் பகுதியில் தனிமையில் சந்திக்க சென்ற கல்லூரி காதலர்கள் சென்ற நிலையில், காதலனின் கழுத்தில் கத்தியை வைத்து கத்தி முனையில் மிரட்டி பலவந்தமாக தூக்கி சென்று காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது போல் தற்போது தமிழகத்தில் இந்த கொடூரங்கள் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷாக் சம்பவம்
மேலும் காதல் என்ற பெயரில் கயவர்களிடம் சிக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையையே தொலைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் காஞ்சிபுரத்தில் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரத்தில் குண்டு குளம் பகுதியில் தனிமையில் சந்திக்க சென்ற கல்லூரி காதலர்கள் சென்ற நிலையில், காதலனின் கழுத்தில் கத்தியை வைத்து கத்தி முனையில் மிரட்டி பலவந்தமாக தூக்கி சென்று காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி காதலர்கள்
காஞ்சிபுரம் விப்பேடு-குண்டுகுளம் எல்லை பகுதியில்,கிராம பகுதியையொட்டி வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்தப் புறவழிச் சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும். இந்த சாலையை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள் உணவகங்கள் தனியார் பள்ளிகள் என அமைந்துள்ளதும், புதிய குடியிருப்பு பிளாட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓர் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவன் மற்றும் மாணவி கடந்த இரு வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

தனிமையில் பேச்சு
இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி காதலன் தனது கல்லூரி காதலியை தனிமையில் சந்திக்க விரும்பி தனது காதலியை அழைத்துக் கொண்டு விப்பேடு-குண்டுகுளம் இடைப்பட்ட பகுதியில் உள்ள காலி வீட்டுமனை பகுதி சென்று அங்கு அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியின் அருகாமையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த மர்ம கும்பல் தனிமையில் இருந்த கல்லூரி காதலர்களை கண்டதும் மது போதையில் காதலனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, அப்பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை
காதலனின் கழுத்தில் கத்தி வைத்ததால் செய்வதறியாது கத்தி கதறி அழுதும், கல் மனம் படைத்த அந்த மது போதை நபர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இதனையெடுத்து இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திட டிஎஸ்பி ஜூலியர் சீசர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற் கொண்டு இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை கைது செய்யும் பணியானது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் காதல் என்ற பெயரில் தனிமையான இடங்களுக்கு செல்வதை காதலர்கள் தவிர்க்க வேண்டுமெனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications