Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

21 வயது பெண் கூட்டு பலாத்காரம்! தப்பியோடிய குற்றவாளிகள்! சுட்டு பிடித்த போலீஸ்! காஞ்சிபுரத்தில் பரபர

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீசார் இரண்டு போரைப் பிடித்துள்ளனர். அவர்கள் தப்பித்து ஓட முயன்ற நிலையில், இருவரையும் போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் கொண்டிருந்த பெண்ணை சிலர் வன்கொடுமை செய்த வழக்கில், போலீசார் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்துள்ளனர்.

 கூட்டுப் பலாத்காரம்

கூட்டுப் பலாத்காரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்கப் பெண் கடந்த டிச.11ஆம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூர், எம்.ஜி.ஆர் நகர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் அப்பெண்ணைக் கத்தியைக் காட்டி மிரட்டி பைக்கில் கடத்தி சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி அழைத்துச் சென்ற அவர்கள் அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், இவ்வழக்கு தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தினர். ஸ்ரீ பெரும்புதூர் டிஎஸ்பி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

 போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சுண்ணாம்பு குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (எ) நாகா வயது 31, பிரகாஷ்(31) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகளைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

 துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார், அவர்களைச் சரணடையும்படி எச்சரித்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் நாகா என்கின்ற நாகராஜ் தனது கையில் இருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான பிரகாஷ் போலீசாரை கத்தியால் வெட்ட முயன்று உள்ளனர். இதைக் கண்டு உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் தற்காப்புக்காகக் குற்றவாளிகள் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.

காயம்

காயம்

போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் நாகராஜுக்கும் பிரகாசுக்கும் காலில் குண்டு பாய்ந்துள்ளது. இதனால் அவர்கள் தப்பிக்க முடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்தனர். உடனடியாக இருவரையும் மடக்கிப் பிடித்த காஞ்சிபுரம் போலீசார், காயமடைந்த அவர்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். குற்றவாளிகள் இருவரும் தப்பி ஓடாத படி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 யார் அவர்கள்

யார் அவர்கள்

குற்றவாளிகள் இருவரும் களவு தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர், செய்யாறு உள்ளிட்ட பல பகுதிகளில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். நாகராஜ் (எ) நாகா என்பவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

 தொடர் பலாத்காரம்

தொடர் பலாத்காரம்

அவர்கள் இருவரும் தனியாக இருக்கும் பெண்களிடம் தாங்கள் காவலர்கள் என்று சொல்லி அறிமுகமாவதும் பின்னர் விசாரணை என்று அழைத்துச் சென்று பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இருவரிடம் இருந்தும் அரிவாள், கத்தி, நெம்பர் பிளேட் கட்டர், ரிவால்வர் ரவுண்ட்ஸ், ராடு உள்ளிட்ட பல ஆயுதங்களையும் காவல்துறை கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+