காஞ்சிபுரம் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. 11 பேர் படுகாயம்.. தீயை அணைக்க போராடிய வீரர்கள்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. அங்கு கேஸ் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த குடோனில் இருந்த சிலிண்டர் ஒன்று நேற்று இரவு வெடித்துள்ளது. இதனால் பெருமளவில் தீ பிடித்துள்ளது.

தீயை அணைக்க ஊழியர்கள் முயன்றும் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்,
ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் அங்கு இருந்த மற்ற சிலிண்டர்கள் வெடித்தன. தீ விபத்து காரணமாக மற்ற சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
இதனால் அங்கு தீ விபத்து மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக எரிந்தது. இதில் அங்கே வேலை பார்த்த ஊழியர்கள், அருகே உள்ள கடையில் வேலை பார்த்த ஊழியர்கள் என்று பலர் காயம் அடைந்தனர்.
இரவு நேரம் என்பதால் யார் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. கடைசியில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 11 பேர் படுகாயம் அடைந்தனர். சிலர் மோசமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ எப்படி ஏற்பட்டது, சிலிண்டர் வெடித்தது எப்படி என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications