பிக்பாஸில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.. சிலருக்கு தெரியவில்லை: காஞ்சியில் கமல் பொளேர்
காஞ்சிபுரம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன; ஆனால் சிலரது கண்களுக்கு அது தெரிவதில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்ன் சாடினார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், தன்னை எம்ஜிஆரின் நீட்சி என பேசி வருகிறார். இதற்கு பதில் தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தார்.

2-ம் கட்ட பிரசாரம்
முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கமல்ஹாசன் பதிலடி தந்திருந்தார். இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை கமல்ஹாசன் தொடங்கினார்.

காஞ்சியில் பெருந்திரள் வரவேற்பு
சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம் வருகை தந்த கமல்ஹாசனுக்கு பெருந்திரளாக கூடி வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய போது தேறமாட்டேன் என்றார்கள். இப்போது என்னை கண்டு பயப்படுகிறார்கள்.

தூக்கம் தொலைத்தவர்கள்
நான் அரசியலுக்கு வந்த பின் பலரது தூக்கமே போய்விட்டது. என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பாக இருக்கிறது. என்னை சிலர் எதிரிகளாக நினைத்தாலும் நான் அப்படி எல்லாம் நினைப்பது இல்லை. ஏனெனில் அவர்கள் தமிழக மக்கள் முன்பாக குற்றவாளிகள்.

பிக்பாஸில் நல்ல விஷயங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன இருக்கிறது என்கிறார்கள். அதில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அது சிலரது கண்களுக்கு தெரியாது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications