Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஞ்சிபுரத்தில் பிரியாணி அண்டாவுக்குள் கள்ளக்காதல்.. பவானி அசிங்கப்பட்டது இப்படித்தான்: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் தாண்டிய தகாத உறவில் இருப்பவர்களின் எண்ணிக்கையில், இந்திய அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.. திருமணமானவர்கள் மற்றும் உறவில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் ரகசியமாகப் பழக உதவும் டேட்டிங் செயலியான 'ஆஷ்லே மேடிசன்' (Ashley Madison) நடத்திய ஆய்வில், இந்தியாவின் 'கள்ளக்காதல் தலைநகரம்' என்ற அதிர்ச்சியூட்டும் பெயரை தமிழகத்தின் காஞ்சிபுரம் பெற்றிருப்பது, பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்புகூட கள்ளக்காதலுக்காக, கணவரை கொல்ல முயன்றுள்ளார் பவானி என்ற பெண்.. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் - பவானி தம்பதியினர்.. இவர்கள் பேரம்பாக்கம் தண்டலம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வந்திருக்கிறார்கள்..

Kancheepuram Biryani Andaa Bavani

இந்த கடையில் மாஸ்டராக வேலை பார்க்கும் திருவாரூரை சேர்ந்த 36 வயது மதன்ராஜ் என்பவருடன், 38 வயது பவானிக்கு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இது ஹரிகிருஷ்ணனுக்கு தெரிந்து, இருவரையும் கண்டித்ததுடன், மதன்ராஜையும் இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டார்.

தள்ளுவண்டி பிரியாணி கடை

இதனால் கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் தவித்த பவானி, கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முடிவுசெய்தார்.. ஆனால், கணவர் ஹரிகிருஷ்ணன் அதிர்டஷ்டவசமாக தப்பியதுடன் போலீசிலும் சென்று புகார் தந்தார். இப்போது கள்ளக்காதல் ஜோடி கைதாகி உள்ளது..

இந்நிலையில், King 24x7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "காஞ்சிபுரத்தில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்திருந்தவர் ஹரிகிருஷ்ணன்.. இங்கு பிரியாணி மாஸ்டராக இருந்திருக்கிறார் மதன்ராஜ்.. இவர்மீது ஹரிகிருஷ்ணன் மனைவி பவானிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது..

சிசிடிவி கேமராவில் அம்பலம்

நாளடைவில் தன்னுடைய மனைவியின் நடத்தையில் ஹரிகிருஷ்ணனுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.. இதனால் கடையில் சிசிடிவி கேமராவை ரகசியமாக பொருத்தி பார்த்து கண்காணித்துள்ளார்.. அந்த கேமராவில் இவர்கள் அந்நியோன்யமாக பழகுவதும் தெரிந்துவிட்டது.

உடனே மதன்ராஜை வேலையிலிருந்து நின்றுவிடும்படி சொல்லிவிட்டு, மனைவி பவானியை கண்டித்துள்ளார். இதற்கு பிறகுதான், கணவனை கொலை செய்ய பவானி முடிவு செய்து, மதன்ராஜிடம் கொலை திட்டத்தை சொன்னார். மதன்ராஜூம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினரை தொடர்பு கொண்டு, விஷயத்தை சொன்னார்.. ஹரிகிருஷ்ணனை கொலை செய்ய 15 லட்சம் ரூபாய் பேரம் பேசி 2 லட்சம் அட்வான்சும் தரப்பட்டது.

2 லட்சம் அட்வான்ஸ் பணம்

சம்பவத்தன்று விபத்துபோல திட்டமிட்டு, டூவீலரில் வந்து கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை, காரை ஏற்றி கொலை செய்ய முயன்றனர்.. ஆனால், அதிர்ஷ்டவசமாக ஹரிகிருஷ்ணன் உயிர் தப்பிவிட்டார்.

தன்னுடைய கணவரை கொலை செய்யாததால், அந்த கூலிப்படையினரிடம் தான் கொடுத்த 2 லட்சம் அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருமாறு பவானி கேட்டிருக்கிறார்.. இதைக்கேட்ட கூலிப்படையினர், நாங்கள் ஹரிகிருஷ்ணனை கொலை செய்யவே முயன்றோம்.. அவர் தப்பிவிட்டதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறோம், அதற்காக கொடுத்த பணத்தை திருப்பி தர முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், இதனை பவானி, மதன்ராஜ் இருவருமே ஏற்காமல், அந்த கூலி படையினரையே மிரட்ட துவங்கினார்கள்.. நாங்கள் தந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை தராவிட்டால் உங்களை போலீசில் சிக்க வைத்துவிடுவோம் என்று மிரட்டினார்கள்..

வீட்டுக்குள்ளேயே கூலிப்படை

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த கூலிப்படையினரோ, உடனே சம்பந்தப்பட்ட ஹரிகிருஷ்ணனுக்கே போனை செய்து விஷயத்தை சொல்லிவிட்டார்கள்.

உன் மனைவிதான், உன்னை கொல்வதற்காக எங்களுக்கு பணம் தந்தார்.. எனவே நீ 5 லட்சம் எங்களுக்கு தந்தால், உன்னை உயிருடன் விட்டுவிடுகிறோம் என்றனர்..

இதைக்கேட்டு அரண்டு போன ஹரிகிருஷ்ணன், உடனே ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு சென்றார்.. அதற்கு பிறகுதான், பவானி, மதன்ராஜ் உள்ளிட்ட கூலிப்படையினரின் செல்போன்கள் அனைத்துமே டிராக் செய்யப்பட்டது.. விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்த போலீசார், கள்ளக்காதல் ஜோடி உட்பட மொத்தம் 5 பேரை கைது செய்துள்ளார்கள். விசாரணையும் அவர்களிடம் நடந்து வருகிறது.

முன்பெல்லாம் கூலிப்படையினர் விரட்டிவந்தால் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொள்வார்கள். ஆனால், இங்கே கூலிப்படையே வீட்டிற்குள் இருக்கிறது.. யாரிடம் பாதுகாப்பாக இருப்பது என்றே தெரியவில்லை..

கள்ளக்காதலில் காஞ்சிபுரம் முதலிடம்

திருமணம் தாண்டிய உறவுகளில் முதலிடத்தில் உள்ளது காஞ்சிபுரம் மாவட்டம்தான்.. இரண்டாவது மத்திய டெல்லி.. 3வது இடத்தில் ஹரியானா மாநிலம் உள்ளது..

இந்தியா முழுக்க புகழ்பெற்ற கோயில்களை கொண்டது இந்த காஞ்சிபுரம் மாவட்டம்தான்.. அப்படிப்பட்ட ஊரில் இப்படியொரு அக்கப்போரு நடந்து வருகிறது.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூலிப்படைகளும் அதிகம்.. கள்ளக்காதல்களில் காஞ்சிபுரம் முதலிடத்தில் உள்ளதற்கு முக்கிய காரணம், தொழிற்சாலைகள், கம்பெனிகள் அதிகம்.. இரவு-பகல் ஷிப்ட் வேலைகள் ஆண்கள், பெண்கள் செல்ல வேண்டியிருக்கும்.. இதுபோன்ற கம்பெனிக்குள் நுழைந்தால் எளிதில் வர முடியாது.. செல்போன்களையும் பயன்படுத்த முடியாது..

தியாகம்தான் குடும்பம்

தண்டனைகள் கடுமையானால், குற்றங்கள் குறையும்.. நம்ம ஊரை பொறுத்தவரை பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாகவே உள்ளது.. போக்சோவில் சிக்கினால், வாழ்க்கையே போய்விடும்.. கொலைக்கும் இதே தண்டனைதான்..

தியாகத்தின் அடிப்படையில்தான் ஒரு குடும்பம் அமைந்துள்ளது.. சிற்றின்பத்துக்காக கொலைகள் வரை செல்வதை சட்டமும் அனுமதிக்காது, சமூகமும் அனுமதிக்காது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+