காஞ்சிபுரத்துக்கு நற்செய்தி.. மாத மாதம் நடக்கும்.. வெள்ளிக்கிழமைகளில் "இவங்க" மட்டும் ரெடியா இருங்க
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு குட்நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றையும் மாவட்ட கலெக்டர் அறிக்கையாக வெளியிட்டும் உள்ளார். என்ன அது?
ரேஷன் அட்டைகள் குறித்து நம்முடைய தமிழக அரசு மக்களின் குறைதீர்ப்பினை கவனத்தில் கொண்டு முகாம்களை நடத்தி வருகிறது.. பொது விநியோக திட்டத்தை மேலும் மேம்படுத்திடும்வகையில் மாதந்தோறும் குறைதீர்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது..

இந்த குறைதீர் முகாம்கள் வாயிலாக ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டும் வருகிறது..
புதுஅறிவிப்பு: அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அங்குள்ள சில கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுவதாகவும், பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
குறிப்பாக, மூன்றாம்பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படியே முகாமும் நடத்தப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.. மூன்றாம்பாலினத்தவர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் என்ற அறிவிப்பானது, அனைத்து தரப்பு மக்களுக்குமே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இப்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
கலெக்டர் அதிரடி: அந்த அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமையில் குறைதீர்க்கும் முகாம் காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமை, திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதேபோல் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயனடைந்த பயனாளிகளில் தற்போது 18 வயதை கடந்தும் முதிர்வுத் தொகை பெறப்படாமல் சிலர் உள்ளனர். அவர்கள், தாங்கள் பயனடைந்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் நேரில் சென்று சமூகநல விரிவாக்க அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் மகிழ்ச்சி: மேலும் ஒவ்வொரு மாதத்தின் 2-ம் செவ்வாய்க்கிழமைகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது" என்று தெரிவித்துள்ளார். திருநங்கைகளின் குறைகளை தீர்ப்பதற்காகவே, மாத மாதம் இந்த கூட்டங்கள் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளது, கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications