தொட்டு தொட்டு சீண்டிய ஆபீசர்.. அதுவும் கோயிலுக்குள்ளேயே.. அப்பட்டமான வீடியோ.. பறந்து வந்த டிரான்ஸ்பர்
கோயில் பெண் ஊழியருக்கு தொல்லை தந்த நிர்வாகி டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்
காஞ்சிபுரம்: கோயிலுக்குள்ளேயே, பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் வேதமூர்த்தி, திருச்செந்தூர் கோயிலுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபன் இதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் 3500 ஆண்டுகள் பழமையானது.. அத்துடன் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளது... இந்த கோவிலின் செயல் அலுவலராக பணிபுரிந்து வருபவர் வேதமூர்த்தி..

பாலியல் சீண்டல்
கடந்த 8-ம் தேதி கோயில் அலுவலகத்தில் யாரும் இல்லாதநேரத்தில், அங்கு அலுவலக அறையில் பணி செய்து கொண்டிருந்த பெண் ஊழியரிடம் தகாத முறையில் இவர் நடந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.. பட்டப்பகலிலேயே அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.. இதனால் அந்த பெண் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளார்.. தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வேதமூர்த்தியை, அந்த பெண் ஊழியர் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

ஒருத்தரும் இல்லை
ஆனால், இந்த விஷயம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று வேதமூர்த்தி மிரட்டி உள்ளார்.. பாதிப்புக்கு உள்ளான அந்த பெண்ணும், பயந்துகொண்டு யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்... ஆனால், திடீரென, இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது... இவர் பாலியல் சீண்டல் செய்தபோது, அந்த இடத்தில் வேறு யாருமே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.. இதையடுத்து, காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்..

வேதமூர்த்தி
அத்துடன், நேரடியாகவே கோவிலுக்கு வந்து, வேதமூர்த்தியிடமும், அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்.. அந்த அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார். அதனடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபன், ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் வேதமூர்த்தியை செயல் அலுவலர் பதவியிலிருந்து பணியிறக்கம் செய்து உத்தரவிட்டார்.. அத்துடன், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அயற்பணியாளராகவும் டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்..

முத்துலட்சுமி
மேலும், கோயில் அயற்பணியாளராக மாற்றப்பட்டுள்ள இவருக்கு கோயில் சம்பளத்தில் இருந்து மட்டும் சம்பளம் வரும் என்றும் ஆணை பிறப்பித்ததுடன், ஆணையர் நிதியிலிருந்து இதுவரை வந்த சம்பளத்தை இனி வழங்கப்படாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.. அதேபோல, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமியை ஏகாம்பரநாதர் கோவிலுக்கு மாற்றம் செய்தும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

கண்மூடித்தனம்
முன்னதாக, இந்த வீடியோ, சோஷியல் மீடியாவி வெளியானபோது, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக புகார் கொடுக்காததால், அந்த செயல்அலுவலர் மீது போலீசாரும், அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்காமல் கண்மூடி இருந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.. கோவிலுக்குள்ளேயே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் வகையில் அநாகரிக செயலில் ஈடுபட்ட வேதமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் இணையவாசிகள் கொந்தளித்தனர்.

சீரியஸ் ஆக்ஷன்
இதற்கு காரணம், இந்த செயல் அலுவலர், ஏற்கனவே இதேபோல ஒருமுறை சர்ச்சையில் சிக்கியவர் ஆவார்.. செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்தபோது இப்படிப்பட்ட தவறுகளை அவர் செய்ததாக கூறப்படுகிறது.. அந்த கோயில் என்றில்லை, இவர் பணிபுரியும் திருக்கோயில்களில் எப்போதுமே இவர் மீது அதிக அளவில் குற்றங்கள் சாட்டப்படுவது வழக்கமாக இருந்து வரவும்தான், இந்த பாலியல் சீண்டல் புகாரும், அதையொட்டி அதிரடி உத்தரவுகளும், தற்போது கடுமையாக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications