காஞ்சிபுரம் மக்களுக்கு நற்செய்தி.. திருவாரூருக்கும் ஹேப்பி.. தமிழக அரசு அதிரடி.. நாளையே ரெடியாகுங்க

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இதையடுத்து, பல்வேறு மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்களும், நிதியுதவியும் வழங்கி, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

Kancheepuram., Thiruvarur districts tomorrow the grievance meeting and major announcement

ரேஷன் அட்டைகள்: குறிப்பாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன... அரசாங்கம் ரேஷன் பொருள்களுடன் பணத்தையும் தரும் என்றாலும், அதன் பலன் சில ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். எனவேதான், மத்திய அரசுடன் இணைந்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாநில அரசால் பல வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், ஒன்றுதான் மருத்துவ வசதிகள்.. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பல உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி இலவச மருத்துவ வசதிகளும் கிடைக்க செய்ய போகிறது.. இந்த வசதி அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச சிகிச்சைக்காக ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படும்.. மேலும், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பிரச்சாரமும் நடைபெறுவதுடன், இந்த அறிவிப்பு மூலம், ரேஷன் அட்டைதாரர்கள் பல நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகம்: தேசிய அளவில் இப்படியென்றால், நம்முடைய தமிழக அரசும் மக்களின் குறைதீர்ப்பினை கவனத்தில் கொண்டு முகாம்களை நடத்தி வருகிறது.. பொது விநியோக திட்டத்தை மேலும் மேம்படுத்திடும்வகையில் மாதந்தோறும் குறைதீர்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.. இந்த குறைதீர் முகாம்கள் வாயிலாக ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டும் வருகிறது..

அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில், நாளை காலை அதாவது ஜூலை 8ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

Kancheepuram., Thiruvarur districts tomorrow the grievance meeting and major announcement

மாவட்ட நிர்வாகம்: இந்த முகாம் தேவர்கண்டநல்லூர், கீழ்க்குடி, திருக்களம்பூர், தொழூவூர், கோட்டூர், கப்பலுடையான், கச்சனம், காவனூர், மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல, காஞ்சிபுரம்‌ மாவட்டத்திலும், நாளை காலை 10.00 மணிக்கு, சிறுவாக்கம்‌, உத்திரமேரூர்‌ வட்டத்தில்‌ ஆனம்பாக்கம்‌, வாலாஜாபாத்‌ வட்டத்தில்‌ உள்ளாவூர்‌, 'திருப்பெரும்புதூர்‌ வட்டத்தில்‌ போந்தூர்‌, குன்றத்தூர்‌ வட்டத்தில்‌ சிக்கராயபுரம்‌ ஆகிய கிராமங்களில்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில்‌ வசித்து வரும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ குடும்ப அட்டையில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கம்‌, முகவரி மாற்றம்‌, புதிய குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம்‌ செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்‌.

திருநங்கைகள்: அந்த மனுக்கள்‌ மீது உடன்‌ தீர்வு காணப்படும்‌. இதைத்தவிர, மூன்றாம்‌பாலினத்தவர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ நரிக்குறவர்‌ சமுதாயத்தினை சேர்ந்தவர்கள்‌ ஏதும்‌ விடுபட்டிருப்பின்‌ அவர்களும்‌ புதிய குடும்ப அட்டைகள்‌ பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்‌ என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, காஞ்சிபுர மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+