வீடா இது? விஜிலென்ஸில் புடிச்சி கொடுத்துடுவேன்.. தரமற்ற வீடுகளை கட்டிய ஒப்பந்ததாரரை வறுத்த கலெக்டர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட இருளர் பழங்குடியினருக்கான குடியிருப்புகள் தரமானதாக இல்லை என ஆய்வுக்கு சென்ற காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி ஒப்பந்ததாரரிடம் சரமாரி கேள்வி எழுப்பி ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் சுமார் ரூ.3.5கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதை நேற்று தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் , குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்ய வரவிருந்தனர்.
அவர்கள் வருவதற்கு முன்பு அக் குடியிருப்புகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த வீடுகள் ஒவ்வொன்றும் ரூ 4.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியரின் இவ் ஆய்வின் போது இருளர் பழங்குடியினருக்காக குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டு வருவது தெரிய வந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். மாவட்ட ஆட்சியர் இது குறித்து விளக்கம் கேட்க இக்குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர் பாபு என்பவரை அழைத்து அது குறித்து முறையிட்டு அவரை கடுமையாக கடிந்து கொண்டார்.

ஒப்பந்ததாரர்
ஒப்பந்ததாரர் பாபுவிடம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உங்களை ஏற்கெனவே எச்சரித்துவிட்டுதானே சென்றோம். எப்போது முடிப்பீர்கள். என்னங்க செய்து வச்சிருக்கீங்க, இது ஏழைகளுக்கான வீடு! தொட்டாலே சிமெண்டெல்லாம் உதிர்கிறது. இப்படியா வீடு கட்டுவது, இந்த வீட்டின் மதிப்பு என்ன? (4 லட்சம் என ஒப்பந்ததாரர் சொல்கிறார்). 4.62 லட்ச ரூபாய்க்கான வீடா இது?

கான்ட்ராக்ட் கேன்சல்
இந்த மாதிரி செய்தீங்கன்னா, நான் கான்ட்ராக்ட்டை கேன்சல் செய்துவிடுவேன். விஜிலென்ஸில் பிடித்து கொடுத்துவிடுவேன் என எச்சரித்தார். மேலும் உடனிருந்த அதிகாரிகளையும் இதெல்லாம் செக் செய்ய மாட்டீங்களா ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் நாங்கள் ஓடி கொண்டே இருக்க வேண்டுமா என கடிந்து கொண்டார்.

தரமற்ற குடியிருப்புகள்
மேலும் தரமற்ற வகையில் குடியிருப்புகளை கட்டும் இந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்து மாற்று ஒப்பந்ததாரர் மூலம் பணியை மேற்கொள்ளுங்கள் என மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீதேவியிடம் அறிவுறுத்தினார். ஸ்ரீதேவியும் தனக்கு கீழ் இருந்த அதிகாரிகளை யூஸ்லெஸ் என திட்டினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications