அது டீ கப் தானே.. ஆக்ஸிஜன் மாஸ்க் எங்கே? உயிரோடு விளையாடிய உத்திரமேரூர் அரசு மருத்துவமனை
காஞ்சிபுரம்: மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் பேப்பர் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்டுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் உழைத்து மக்களின் உயிரை காப்பாற்றும் ஏராளமான மருத்துவர்களும், செவிலியர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதே சமயத்தில், ஒருசில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப்போக்கால் சில மோசமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

அண்மையில் கூட ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அக்குழந்தையின் கை அழுகி கடைசியில் அதை நீக்கும் நிலை வந்தது. மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த பள்ளி மாணவனுக்கு பேப்பர் கப் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் ஒரு பள்ளி மாணவனுக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அந்த மாணவனை உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவனுக்கு நெஞ்சில் உள்ள சளியை இளக்கும் நெபுலைஸர் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு ஆக்சிஜன் மாஸ்க் தேவை. ஆனால், மருத்துவமனையில் அந்த நேரத்தில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதனைப்பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த காட்சியை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஊடகங்களிலும் இதுதொடர்பான வீடியோ செய்தியாக வெளியானது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பான விசாரணை அறிக்கையை உயரதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு மருத்துவமனைகளைப் பற்றியும் சுகாதாரத்துறையை பற்றியும் பலரும் பெருமையாக கூறி வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளை விட பல அரசு மருத்துவமனைகளின் சிகிச்சைகளின் தரம் சிறப்பாகவே உள்ளதாக பாரட்டும் பெற்று வருகிறது. ஒரு சில அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் இதுபோன்ற அலட்சியமான சம்பவங்களால் அனைத்து அரசு மருத்துவமனைகளும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications