காஞ்சிபுரம் காதலிக்கு காலையிலேயே போன்.. சிறுவனின் துணிமணியை பார்த்து ஆடிப்போன போலீஸ்.. கொடுமை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த பகீர் சம்பவம், அம்மாவட்ட மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. இது தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், விசாரணையையும் அவரிடம் தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?

காஞ்சிபுரம் கலெக்டர் ஆபீஸ் அருகே நேரு நகரில் வசித்து வருபவர் ஆனந்தன்.. இவரது மனைவி பெயர் தனம்... இவர்களுக்கு 8 வயதில் ஷோபனா என்ற மகளும், 6 வயதில் குகன் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருமே அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர்.

kanchipuram kancheepuram

ஆனால், சில வருடங்களாகவே, கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் இருவரும் பிரிந்து வசித்து வருகிறார்கள்.. தனம் தன்னுடைய பிள்ளைகளுடன் நேரு நகரிலேயே வசித்து வருகிறார்..

நில எடுப்பு: குடும்பத்துக்காக, பரந்தூர் நில எடுப்பு அலுவலகத்தில் மசால்சி வேலையை செய்து வருகிறார். இதே அலுவலகத்தில் ராஜேஷ் என்பவரும் வேலை பார்க்கிறார். இவர் செவிலி மேட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதால், என்பதால், இவருடன் தனத்துக்கு, தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனம் வீட்டுக்கு ராஜேஷ் அடிக்கடி வந்துபோவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படித்தான், கடந்த சனிக்கிழமை சாயங்காலம் தனம் வீட்டுக்கு ராஜேஷ் வந்துள்ளார்.

கள்ளக்காதலி: கிளம்பி செல்லும்போது, தனத்திடம் சொல்லிவிட்டு, 2 பிள்ளைகளையும் ராஜேஷ் தன்னுடன் கூட்டிச்செல்ல முயன்றார். ஆனால், அப்போது, அம்மா குறுக்கிட்டு, குழந்தைகளை அழைத்து கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்று தடுத்துள்ளார். உடனே தனம், பிள்ளைகளை ராஜேஷ் அழைத்துப் போகட்டும் என்று கூறியிருக்கிறார்.

பின்னர், ராஜேஷ், தனத்தின் 2 பிள்ளைகளையும் தன்னுடைய வீட்டுக்கு அன்றைய தினம் இரவு அழைத்து சென்றுள்ளார்.. ஆனால் விடிகாலையிலேயே, தனத்துக்கு போன் செய்த ராஜேஷ், 6 மகன் குகனுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது.. மருத்துவமனைக்கு கொண்டு சொல்கிறேன் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

சிறுவன் குகன்: பிறகு குகனையும் பைக்கில் உட்கார வைத்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்... அங்கே டாக்டர்கள் குகனை பரிசோதித்து விட்டு ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக சொன்னார்கள். அப்போது சிறுவனின் உடம்பில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருப்பதையும் டாக்டர்கள் கவனித்தனர். இதையடுத்து, மருத்துவமனையிலிருந்து போலீசுக்கு தகவல் தரப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து, குகனின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு, தனத்தின் மகள், 3ம் வகுப்பு படிக்கும் ஷோபனா, அன்றைய தினம் ராஜேஷ் வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றி போலீசாரிடம் சொன்னாள்.. "என் தம்பியை ராஜேஷ் அங்கிள் அடித்து மிதித்து தள்ளிவிட்டார்... அதனால் என் தம்பி இறந்துட்டான்" என்று தெளிவாக சொன்னதாக தெரிகிறது.

துணிமணிகள்:
இதையடுத்து, போலீசார் ராஜேஷ் வீட்டுக்கு விரைந்தனர்.. அங்கே குகனின் ரத்தக்கரை படிந்த துணிமணிகள் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.. அவைகளை கைப்பற்றிய போலீசார், குகனின் சாவில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.. பிறகு, ராஜேஷையும் கைது செய்தனர்.. இன்னும் ராஜேஷிடம் விசாரணை முழுமையாக முடியவில்லை.. ஆனால், கள்ளக்காதலுக்காக, 6 வயது சிறுவனை அடித்து கொன்ற சம்பவம் காஞ்சிபுரத்தை உலுக்கி எடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+