ரத்த பலி.. சீண்டினால் இதான் கதி! திமுக கவுன்சிலர் தலையை எடுத்த "லோக்கல் டான் லோகம்மா".. பரபர வீடியோ
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திமுக கவுன்சிலர் சதீஷை கொன்ற லோக்கல் தாதா லோகேஸ்வரி கொலைக்கு பின்பாக வீடியோ ஒன்றை எடுத்து அதை வாட்ஸ் ஆப்பில் சுற்றலில் விட்டது வைரலாகி வருகிறது.
கள்ளச்சாராயம், பாலியல் தொழில், கட்டப்பஞ்சாயத்து, கூலிப்படை என்று காஞ்சிபுரத்தில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி லோக்கல் டான் லோகம்மா என்னும் லோகேஸ்வரி என்னும் எஸ்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் திமுக கவுன்சிலரை கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் நடுவீரப்பட்டி ஊராட்சியில் 7வது வார்டு உறுப்பினராக இருந்தவர் திமுகவை சேர்ந்த சதீஷ். 30 வயதான இவரை வீட்டிற்கு அழைத்து கொலை செய்து இருக்கிறார் லோகேஸ்வரி.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் கடந்த சில வருடங்களாகவே லோகேஸ்வரி கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார். இந்த நிலையில் கவுன்சிலர் சதீஷ் லோகேஸ்வரிக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக கோபம் அடைந்த லோகேஸ்வரி சதீஷை வீட்டிற்கே அழைத்து சென்று, அங்கு வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். வீட்டில் இருந்த தனது "தம்பிகள்" உதவியுடன் லோகேஸ்வரி சதீஷை கொலை செய்துள்ளார்.

கொலை
அதோடு போலீசிலும் சதீஷ் சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது. லோகேஸ்வரிக்கும் சதீஷுக்கும் முன்பே வேறு பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. திமுகவில் சதீஷுக்கு கிடைத்த கவுன்சிலர் சீட்டில் தன்னுடைய ஆளை நிறுத்தி வெற்றிபெற வைக்க லோகேஸ்வரி முயன்று உள்ளார். ஆனால் காஞ்சிபுர திமுகவில் உள்ள வேறு ஒரு பெண் நிர்வாகி முயற்சியால் சதீஷுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து உள்ளது. அந்த பெண் நிர்வாகிக்கும், லோகேஸ்வரிக்கும் ஆகாது என்று கூறப்படுகிறது.

சரண் அடைந்தார்
எதிர் தரப்பில் இருந்து வந்து சதீஷ் கவுன்சிலர் ஆனதால், லோகேஷ், அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து உள்ளார். அதோடு இரண்டு தரப்பு ஆட்களுக்கு இடையில் அடிக்கடி இதனால் சண்டையும் வந்துள்ளது. இந்த நிலையில்தான் கள்ளச்சாராய விவகாரத்தில் கொதித்து போன லோகேஸ்வரி சதீஷை வீட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளார். அந்த ஊர் ஊராட்சி மன்ற தலைவருக்கு சதீஷ் நெருக்கம்.

நெருக்கம்
அவருக்கு லோகேஸ்வரியும் நெருக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் வழியாக சமாதானம் பேசலாம் என்று அழைத்து வந்து, அதன்பின் சதீஷை கழுத்தை அறுத்து கொன்றுள்ளார் லோக்கல் டான் லேகம்மா. இதோடு நிற்காமல் சதீஷ் தலையை எடுத்து சென்று வாசலில் சாலையில் போட்டு உள்ளார். மேலும் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் லோகம்மா எடுத்துள்ளார். அந்த வீடியோவை அவர் அந்த பகுதி அரசியல்வாதிகள், கவுன்சிலருக்கும் அனுப்பி இருக்கிறார்.

என்ன வீடியோ
அந்த வீடியோவில் இவர்.. என்னை சீண்டினால் இப்படித்தான் நடக்கும். என் மீது கை வைத்தால் உயிர் இருக்காது. என்னை எதிர்த்தவர்கள் கதையை இப்படித்தான் க்ளோஸ் செய்வேன். என்னிடம் வைத்துக்கொள்ள வேண்டாம், என்று கூறி லோகேஸ்வரி வீடியோ ஒன்றை எடுத்து அதை, அரசியல் தலைவர்கள் பலருக்கு உள்ளூரில் அனுப்பி உள்ளார். தற்போது லோகேஸ்வரி கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் இவர் கும்பலை மொத்தமாக பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications