வாடகை வீட்டு பெண்களிடம் துடைப்பத்திலேயே அடிவாங்கிய ஹவுஸ் ஓனர்.. காலையில்தான் கைதானார்.. இப்ப பாருங்க
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக பிரமுகர் , 2 பெண்களிடம் சேட்டை செய்ததால், இன்று கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.. அத்துடன், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம்.. 60 வயதாகிறது.. இவர் அதிமுகவில் எம்ஜிஆர் மன்ற இணை ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய வீட்டின் மேல் மாடியை வாடகைக்கு விட்டுள்ளார்.. இதில், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் 2 இளம் பெண்கள் குடியிருந்து வந்துள்ளனர்..

பொன்னம்பலம்: பொன்னம்பலம் இந்த பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.. இதனால் அதிர்ச்சியடைந்த 2 பெண்கள், இவருக்கு பயந்து, கடந்த டிசம்பர் மாதம். அந்த வீட்டையே காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு வாடகைக்கு சென்றுள்ளனர்.
ஆனாலும் பொன்னம்பலம் விடாமல், அந்த பெண்களுக்கு துரத்தி துரத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார்.. அந்த பெண்கள் வேலைக்கு போனாலும், வேலையிலிருந்து திரும்பி வீட்டுக்கு வரும்போதும், பைக்கிலேயே சென்று, பாலியல் டார்ச்சர் தந்து வந்துள்ளார்.. போதாக்குறைக்கு, செல்போனிலும் தொடர்பு கொண்டு பாலியல் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால், அந்த 2 பெண்களும், பொன்னம்பலம் பற்றி தன்னுடைய தோழிகளிடம் இதை பற்றி பலமுறை சொல்லி அழுதுள்ளனர்.
பாலியல் தொந்தரவு: இப்படித்தான், இன்று விடிகாலை 5 மணிக்கு , பொன்னம்பலம் அந்தப் பெண்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று, பாலியல் தொந்தரவும் தந்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்களும், சக தோழிகளும் சேர்ந்து பொன்னம்பலத்தை துடைப்பத்தாலேயே அடித்து விரட்டியிருக்கிறார்கள். அத்துடன், இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தனர்.
துடைப்பத்தால் அந்த பெண்கள் அடித்ததுமே, "வயசு பொண்ணுங்க இருக்கிற ரூமுக்கு வந்தது என் தப்புதான்" என்று ஹவுஸ் ஓனர் சொல்வது முதல் அவர் வீட்டை விட்டு வெளியேறும்வரை துடைப்பத்தால் அடித்து விரட்டுவது வரை அனைத்துமே அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
அதிரடி கைது: மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மணிமங்கலம் போலீசிலும் புகார் தந்தனர்.. இதையடுத்து போலீசார் விரைந்து சென்ற பொன்னம்பலத்தை உடனடியாக ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு வந்தனர். பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், ஆபாச வார்த்தையால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இறுதியில், பொன்னம்பலத்தை கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.
இதனிடையே, அதிமுக நிர்வாகியாக இருந்த பொன்னம்பலத்தை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். படப்பை பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்தபடியே இருந்தது..
ஜாமீன்: இந்நிலையில், பொன்னம்பலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வயது மூப்பு, நோய் இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வைத்த வாதத்தை ஏற்று அவருக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காலையில் கைதான நிலையில், தற்போது இந்த ஜாமீன் தரப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications