காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

18 ஊழியர்களுக்கு கொரோனா.. சென்னை ஒரகடம் நோக்கியா நிறுவனம் மூடல்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: 18 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னை ஒரகடம் அருகே உள்ள நோக்கியா நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 11 ஆயிரத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பு சென்னையில்தான் இருந்தது.

Nokia Solutions company closed after its 18 staff tested corona positive

4ஆவது லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கியுள்ளன. எனினும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள நோக்கியா சொல்யூஷன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. செல்போன்களுக்கு உதிரி பாகங்கள் தயார் செய்யும் இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். இங்கு 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதிகம் பணம் சம்பாதிக்க.. மதுக்கடைகளை ஏலம் விடலாம்.. கிரண்பேடி வலியுறுத்தல்அதிகம் பணம் சம்பாதிக்க.. மதுக்கடைகளை ஏலம் விடலாம்.. கிரண்பேடி வலியுறுத்தல்

இந்த நிலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

English summary
Nokia Solutions company in Oragadam closed after its 18 staffs tested positive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X