இப்போ பெட்ரோல், டீசல் விலையை குறைச்சது ஓகே.. ஆனா.. நறுக்குன்னு கேட்ட ப. சிதம்பரம்.. நோட் பண்ணுங்க
சென்னை: பெட்ரோல் டீசல் விலை நேற்று குறைக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சந்தேகம் எழுப்பி உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக பெட்ரோல், டீசல் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் 2 ரூபாய் விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது. 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது.
மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.
அதன்பின் 2 வருடமாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை ரூபாய் 2 குறைக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 94.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 87.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 99.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 85.89 ரூபாயை தாண்டி உள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ப. சிதம்பரம் கேள்வி: பெட்ரோல் டீசல் விலை நேற்று குறைக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சந்தேகம் எழுப்பி உள்ளார்.
அதில், பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்பட்டது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். அதில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தேன். அது இன்று செய்யப்பட்டது
தேர்தலுக்குப் பிறகு (மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்) விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா? எல்பிஜி சிலிண்டரின் விலையை பாஜக அரசு ரூ.700 உயர்த்தி, தேர்தலுக்கு முன்பு ரூ.100 குறைத்தது. பெட்ரோல், டீசல் விஷயத்திலும் இதே மாதிரியான கையாடல்தான் கடைப்பிடிக்கப்படுகிறது, என்று கேட்டுள்ளார்.
சிலிண்டர் விலை குறைப்பு; அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடந்த வாரம் மகளிர் தினத்தையொட்டி நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ 100 குறைப்பு என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கொண்டுதான் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications