Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரகடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஃபாக்ஸ்கான் ஆலை பெண் தொழிலாளர்கள் திடீர் கைது

Subscribe to Oneindia Tamil

ஒரகடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஃபாக்ஸ்கான் ஆலை பெண் தொழிலாளர்கள் திடீர் கைது.. என்ன காரணம்?

Recommended Video

    விஷமாக மாறிய உணவு… 8 பேரின் கதி என்ன? பெண் ஊழியர்கள் விடிய விடிய போராட்டம்!

    காஞ்சிபுரம்: விடுதியில் தரமான உணவை வழங்கக்கோரி ஒரகடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த ஃபாக்ஸ்கான் ஆலை பெண் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் செல்போன்களை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் ஆலை அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

    இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தரமான உணவு இல்லை

    தரமான உணவு இல்லை

    இருப்பினும், இந்த விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை உட்பட பல புகார்கள் உள்ளன. இதற்கிடையே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்கி இருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட மிகவும் மோதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த உணவைச் சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

     மருத்துவனை

    மருத்துவனை

    இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இருப்பினும், சில பெண்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விடுதி நிர்வாகம் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    மறியல் போராட்டம்

    மறியல் போராட்டம்

    இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் இன்று அதிகாலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடத் தொடங்கினர். புளியம்பாக்கம், வடகால், சுங்குவார்சத்திரம் என பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் மறியலில் ஈடுபட்டதால் அங்குப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. முக்கிய நெடுஞ்சாலை என்பதால் சாலையில் இரண்டு புறமும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றது.

    ஆட்சியர் பேச்சுவார்த்தை

    ஆட்சியர் பேச்சுவார்த்தை

    இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறிய ஆட்சியர் ஆர்த்தி, சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடம் வீடியோ காலில் பேசினார். மேலும், கெட்டுப்போன உணவு அளித்த விடுதி வார்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+