ஹீரோக்களை திரையில் தேடாதீர்கள்.. ’இவங்க’ தான் ரியல் ஹீரோக்கள்! சுட்டிக் காட்டிய செளமியா அன்புமணி
காஞ்சிபுரம்: மதுக்கடையை ஒழிக்கப் போராடியவர்கள் மற்றும் சிறை சென்றவர்கள் தான் ரியல் ஹீரோக்கள் எனவும், ஹீரோக்களைத் திரையில் தேடாதீர்கள் என கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, தனது 'சிங்கப் பெண்ணே எழுந்து வா' என்ற தலைப்பிலான மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இங்குள்ளவர்கள் கவலைகள் அனைத்தையும் மறந்து சின்னப் பெண்களாக மாறிவிட்டீர்கள். அப்படிப்பட்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை தினமும் வாழ வேண்டும் என்பதே நம்முடைய உரிமை. இன்று போல் என்றும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

செளமியா அன்புமணி
இந்த உரிமைகளைக் கொடுக்க வேண்டியதுதான் அரசாங்கத்தின் கடமை. கல்வி, மருத்துவம், விவசாயம் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. "கடனை அரசாங்கம் கொடுக்கக் கூடாது, மருத்துவச் செலவைக் கொடுக்கக் கூடாது, பள்ளிப்படிப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை இலவசம், எந்த மருத்துவம் பார்த்தாலும் இலவசம் இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. இதுதான் பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையில் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறோம்.
பாமக பெண்கள் உரிமை
விவசாயத்திற்கும் அனைத்தும் இலவசம். இவை அனைத்தும் உங்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டால் உங்களுக்குக் கடன் சுமை இருக்காது." இவை அனைத்தும் இலவசமாகக் கிடைத்தால், பெண்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் பட்டுப்புடவைகளை மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்ளலாம் என்றும், பொருளாதார முன்னேற்றம் பெண்களுக்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். குழந்தைகளின் வேலை மற்றும் வேலைவாய்ப்புகள் பெறுவது நம்முடைய உரிமை, அதைக் கொடுப்பது அரசின் கடமை.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
ஊரக உள்ளாட்சியில் 500 வாக்குகள் மட்டுமே இருக்கும், வார்டு மெம்பராக வேண்டும் என்றால் 150 ஓட்டுகள் வாங்கினால் கூட போதும் வார்டு உறுப்பினராக ஆகிவிடலாம். சொந்தக்காரர்களின் வாக்குகளை வாங்கினால் மட்டுமே போதும் நீங்கள் வெற்றி பெற்று விடலாம். நீங்கள் வெற்றி பெற்றால் தான் மகளிர்கள் காண உரிமையைப் பெற முடியும். இங்கு நாம் சொல்கின்ற விஷயத்தை மக்களிடம் சென்று கொண்டு சேருங்கள். அதைக் கேட்ட பொதுமக்கள், அந்தப் பெண்ணுக்கு நிறைய தெரிந்திருக்கிறது, வெற்றி பெற வைக்கலாம் என வாக்களிப்பார்கள். நீங்கள் கவுன்சிலராக வெற்றி பெற்றால் சேர்மன் பதவி வரை வெற்றி பெறலாம். உள்ளாட்சித் தேர்தலில் 50% பெண்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறது, அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மதுக்கடை போராட்டம்
மேடையில் இருந்த பெண்கள் அனைவருமே மதுக்கடையை ஒழிக்கப் போராடியவர்கள் மற்றும் சிறை சென்றவர்கள். சக்தி கமலம்மாள் உள்ளிட்டோர் மது ஒழிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு கூட மதுக்கடைக்கு எதிராக பலர் போராடி இருக்கிறார்கள், அவர்கள் தான் மேடையில் இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பா.ம.க.வில் இருக்கும் மகளிர் நிர்வாகிகள் தான் கொடி பிடித்துக் கொண்டு உங்களுக்காக முன்னிருப்பார்கள்.
நிஜ ஹீரோக்கள்
பெண்களின் குரலாக இவர்கள்தான் இருக்கிறார்கள், இவர்கள்தான் ரியல் ஹீரோக்கள். ஹீரோக்களைத் திரையில் தேடாதீர்கள், இங்கிருப்பவர்கள் தான் உங்களுக்காக ஓடி வந்து உதவி செய்வார்கள். உங்களுக்கு மருத்துவ ரீதியான பிரச்சினை, காவல் நிலையத்தில் பிரச்சினை என்றால், இந்த மேடையில் இருக்கும் நிர்வாகிகள் தான் ஓடி வந்து உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்கள். இவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களைத் தான் நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்" என்றார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications