நான் முதல்வர் வேட்பாளர் என எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை.. ஆனால்.. திருமாவளவன் பேச்சு
Recommended Video
காஞ்சிபுரம்: தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வராது. பாஜக இங்கு காலூன்ற முடியாது. நடிகர்களும் அரசியல் செய்ய முடியாது என திருப்போரூரில் தனியார் தொலைகாட்சி செய்தியாளரின் சீர்திருத்த திருமண விழாவில் தொல்.திருமா பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகர் கோயில் பின்புறம் தனியார் திருமண மண்டபத்தில் தனியார் தொலைகாட்சி செய்தியாளர் நந்தகோபால்-சங்கீதா எஸ்தர் இருவர் செய்து கொண்ட சீர்த்திருத்த திருமண விழா நடைபெற்றது.
மந்திரம் சொல்லாமல், அர்ச்சகர் இல்லாமல், யாகம் வளர்த்தாமல் நடைபெற்ற சீர்த்திருத்த திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திருமணத்தை நடத்திவைத்தார்.

ஆளுமை
பின்னர் மணமக்கள் இருவரையும் வாழ்த்திய பின்பு மேடையில் பேசிய அவர், கருணாநிதிக்கு பிறகு திமுக நீர்த்து போகும் என்று சிலர் கனவு கண்டிருந்தனர். அவர்கள் கண்களில் மண் விழும் அளவிற்கு இன்று இயக்கத்தை ஆளுமையோடு வழிநடத்துகிறார் இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின்.

சமூகவலைதளங்கள்
தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வராது. பாஜக இங்கு காலூன்ற முடியாது. நடிகர்களும் அரசியல் செய்ய முடியாது. எப்படியாவது இந்த கூட்டணியை பிரித்துவிட வேண்டும் என்று சாதிவாத கட்சிகளும், மதவாத கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு சமூக வலைதளங்களில் எதிராக பரப்பி வருகின்றனர்.

வதந்தி
நானும் முதல்வர் வேட்பாளர் என்று எங்கேயும் சொன்னது இல்லை. இருந்தாலும் எல்லோருடைய இலக்கும் பார்வையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நோக்கி இருக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக, கூட்டணியை சீர்குலைப்பதற்காக, திட்டமிட்டே அவதூறும், வதந்தியையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

சந்தேகம்
உள்ளாட்சி தேர்தல் வரும் என்று எதிர்ப்பார்போடு காத்திருக்கிறோம். ஆனால் சினிமா காமெடி போல் வரும் ஆனா வராது என்று கடைசியில் கூறிவிடுவார்களோ என்ற ஒரு சந்தேகமும் உள்ளது என தொல்.திருமாவளவன் பேசினார்.












Click it and Unblock the Notifications