சாக்கு போக்கு சொல்லாதீங்க.. சாம்சங் விஷயத்தில் அரசை எதிர்க்கும் திருமா! ஸ்டாலினை சந்திக்க முடிவு
காஞ்சிபுரம்: அமைதியாக அறவழியில் போராடிய தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை அரசு திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக சாக்கு போக்கு சொல்லாமல் சிஐடியூ யூனியன் அமைக்க அரசு நேரடியாக முடிவு எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த பிறகு திருமாவளவன் கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் உறுதியளித்தார். இது திமுகவுக்கு பிரஷரை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் 16 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக வேலையை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

தற்போது இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊதிய உயர்வு, 8 மணி நேர ஷிப்ட, குழந்தைகளுக்கான பள்ளி வசதி, போனஸ் உள்பட 15 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ள நிலையில் சிஐடியூ தொழிலாளர் யூனியன் அமைக்கும் கோரிக்கை மட்டும் ஏற்கப்படவில்லை.
இந்த சிஐடியூ தொழிலாளர் யூனியன் அமைக்க அனுமதி வழங்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததாக சிலர் கைது செய்யப்பட்டாலும் கூட போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் தான் சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்களான கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் இன்று சாம்சங் தொழிலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அமைதியாக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ததை அவர்கள் கண்டித்தனர். மேலும் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தி உள்ளனர். அதன்பிறகு 3 பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமாவளவன் கூறியதாவது:
அமைதியாக அறவழியில் போராடிய தொழிலாளர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இந்த பிரச்சனையில் நேரடியாக முதல்வர் தலையிட வேண்டும். முதல்வர் தலையிட்டால் தான் பிரச்சனைகக்கு சமூகமாக தீர்வு கிடைக்கும். நாங்கள் தோழமை கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் இரண்டொரு நாளில் முதல்வரை சந்தித்து இந்த பிரச்சனை பற்றி வலியுறுத்த எண்ணி உள்ளோம்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று சாக்கு போக்கு காட்டாமல் அரசு நேரடியாக முடிவு எடுக்க முடியும். அப்படி அரசு முடிவு எடுத்தால் அந்த வழக்கு செயலிழந்து போகும். அரசுக்கு அதிகாரம் உள்ளது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையருக்கு பதிவாளர் என்ற முறையில் பொறுப்பில் உள்ள இணை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. ஒரு சங்கத்தை பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ளது. அது சட்டப்பூர்வமானது. அதிகாரப்பூர்வமானது. அதில் என்ன தயக்கம் அரசுக்கு இருக்கிறது. அதுதான் இங்கே பிரச்சனையின் புள்ளியாகவும், மூலமாகவும் உள்ளது.
அதனால் அரசு அதிகாரிகளிடம் இருக்கும் தயக்கத்தை தவிர்த்து சங்கத்தை பதிவு செய்வதற்கு முன்வர வேண்டும். அந்த சங்கம் பிறகு நிர்வாகத்திடம் பேசி கோரிக்கையை வலியுறுத்தும். 16, 17 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காமல் இருப்பதே ஒரு அடக்குமுறையாகும். நாங்கள் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக இல்லை. அவர்களின் அடக்குமுறை போக்கிற்கு எதிராக இருக்கிறோம்.
பன்னாட்டு நாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்கு எதிராக நாங்கள் இல்லை. ஆனால் அவர்கள் தொழிலாளர்களை சுரண்டுவதை எதிர்க்கிறோம். சங்கம் வைத்து கொள்வதற்கு ஜனநாயக பூர்வ உரிமை உள்ளபோது அதனை அரசும், அதிகாரிகளும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்'' என்றார். திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் இந்த முடிவுக்கு திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications