வெள்ளை தேவதை.. அந்தரத்தில் தொங்கியபடி.. சொர்க்கத்தில் நடந்த கல்யாணம்.. ஊசலாடிய உயிர்.. கொதித்த இணையம்
சென்னை: திருமணம் ஒன்று நிஜமாகவே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் Pre-Wedding பிரீ வெட்டிங் ஷூட் மற்றும் திருமணத்துக்கு பிறகு எடுக்கப்படும் போட்டோ ஷூட்கள், சமீபகாலமாகவே, இளைஞர்களிடம் பிரபலமாகி வருகிறது.

அதிலும், திருமணத்துக்கு முன்பு எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் ஷூட்டி, சற்று எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது.. சில சமயம், ஆபாசத்தின் உச்சத்திற்கும் போய்விடுகிறது. ஆனாலும், கிட்டத்தட்ட ஷாட் பிலிம் அளவுக்கு, குறும்படம்போல எடுக்கும் இந்த வீடியோக்களை, புது மண தம்பதிகள் இணையத்தில் பதிவிட்டு, ட்ரெண்டாக்கியும் விடுகிறார்கள்..!!
போட்டோ ஷூட்: ஆனால், இந்த இரண்டு ஷூட்களையுமே மிஞ்சிவிட்டது, தற்போது நடந்துள்ள ஒரு திருமண நிச்சயதார்த்தம்... இது எந்த ஊரில் நடந்த திருமணம் என்று தெரியவில்லை.. ஆனால், வீடியோ படுவைரலாகி கொண்டிருக்கிது.
வீடியோவில், ஏராளமான மக்கள் மண்டபத்தில் குழுமியிருக்கிறார்கள்.. போட்டோகிராபர்கள், வீடியோ கிராபர்கள், கேமராவுடன் பிஸியாக இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் என்பதால், மோதிரம் மாற்றிக்கொள்ள, மணமக்கள் தயாரா நிற்கிறார்கள்.. இதனால், அந்த கல்யாண மண்டபமே ஆர்வம் பெருக காணப்படுகிறது..
மண்டபம்: மண்டபம் முழுவதுமே, கிட்டத்தட்ட சொர்க்கத்தை போலவே அலங்கரிக்கப்பட்டுள்ளது. எங்கே திரும்பினாலும், வண்ண வண்ண மலர்கள், கலர் கலர் விளக்குகள், அந்த அரங்கமே ஜொலிஜொலிக்கிறது. பெரிய பெரிய மரங்கள், செடிகள், கொடிகள் செட்டிங் ஒருபக்கமும், சிறிய பெரிய விளக்குகள் மறுபக்கமும், நீண்டு வளர்ந்து காணப்படுகின்றன.. மேலே அந்தரத்தில் பார்த்தால், சில பெண்கள் தொங்கி கொண்டிருக்கிறார்கள்.
அச்சுஅசல், பாரதிராஜா படத்தில் வரும், தேவதைகள் போலவே காணப்படுகிறார்கள்.. ஒருவேளை பெண் பொம்மைகளை கட்டி தொங்கவிட்டிருப்பார்கள் என்று பார்த்தால், நிஜமாகவே அவர்கள் உயிருள்ள பெண்கள்தான்.. வெள்ளை கலர் கவுனை அணிந்துள்ளார்கள்.. இரு கைகளிலும், தட்டில் பூக்களை ஏந்தியபடி பறந்து கொண்டிருக்கிறார்கள்.. மணமக்கள் மோதிரம் மாற்றும்போது, அவர்களுக்கு பூ தூவி வாழ்த்துவதற்காக, இப்படி தொங்கவிடப்பட்டுள்ளார்கள்.
எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல், அந்தரத்தில் தொங்கியபடி காணப்படும் இந்த வெள்ளை டிரஸ் பெண்களை பார்த்து இணையவாசிகள் பதறிப்போய்விட்டார்கள்.
சொர்க்கம்: கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதையடுத்து, வானில் உள்ள தேவதைகள் எல்லாம் ஒன்றுகூடி, கீழிறங்கிவந்து, இந்த மணமக்களை வாழ்த்தி, ஆசீர்வதிப்பதுதான், இந்த வீடியோவின் மொத்த கான்செப்ட் ஆகும்.
இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தது யார் என்று தெரியவில்லை.. @nikitachaturvedi10 என்பவர் இந்த வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருக்கிறார்.. இந்த 'பறக்கும் தேவதைகளை' பார்த்து, இணையவாசிகள் வாயை பிளந்து கொண்டு, ரசிப்பார்கள் என்று மணமக்கள் எதிர்பார்த்தார்கள் போலும்.. அப்படி எதுவுமே நடக்கவில்லை. மாறாக, தாறுமாறாக திட்ட துவங்கிவிட்டார்கள்.
மனிதாபிமானம்: பெண்களை இப்படியா அந்தரத்தில் கட்டி தொங்கவிடுவது? இத மனிதாபிமானமற்றது என்று விமர்சிக்க துவங்கினர்.. ஆனால், இந்த பெண் கலைஞர்கள், இதற்காகவே ஸ்பெஷல் டிரெயினிங் எடுத்த தொழில் வல்லுநர்கள் என்று நிகிதா தெளிவுபடுத்தினார்.. அத்துடன், இதற்கு முன்பு நிறைய ரிகர்சல்கள், பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன என்றும் விளக்கம் தந்திருந்தார்.. ஆனாலும், நிகிதாவின் கருத்தை யாருமே ஏற்கவில்லை..
"இந்த செயல் கண்டிக்கத்தக்கது.. அவர்களும் மனிதர்கள்தானே? ஒரு மனிதனை ஒரு காட்சி பொருளாக கருதுவது சரியா? இது மனித உரிமைக்கு எதிரானது.. பெண்களின் மீதான வெறுப்பை உமிழ்ந்தது போல உள்ளது.. இப்படி ஒரு ஏற்பாட்டை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், அவர்கள் மனநிலை குன்றியவர்களாகத்தான் இருக்க முடியும்.. இப்படித்தான் தங்கள் வீட்டு பெண்களையும் கயிறு கட்டி அந்தரத்தில் தொங்கவிடுவார்களா?" என்றெல்லாம் தாறுமாறாக திட்டி தீர்த்து வருகிறார்கள் இணையவாசிகள்.
கண்டனம்: ஒருசில வினாடிகளே காட்சி பதிவாகியிருந்தாலும், 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர், இந்த வீடியோவை பார்த்துள்ளதுடன், பதறிப்போய், கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications