TVK: "தயவு செய்து போங்கம்மா" விஜய்யை பார்க்க குழந்தைகளுடன் வந்த பெண்களை வெளியேற்றிய புஸ்ஸி ஆனந்த்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தை அடுத்த குன்னத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடைபெறும் விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் வந்த பெண்களை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியேற்றினார்.

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து விஜய்யும் அவரது கட்சியினரும் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தனர். இந்த நிலையில் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் அறிவித்த நிவாரணத் தொகை ரூ 20 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தினார் விஜய்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, தான் எல்லாமுமாக இருப்பதாக உறுதியும் தந்தார். இந்த சம்பவங்களுக்கு பிறகு கட்சியின் சிறப்பு பொதுக் குழுவை கூட்டினார்.
அதில் தவெக பயணம் தொடரும் என்று அறிவித்தார். மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயத்தமானார். இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்கினார்.
அவர்களுக்கு ராணுவம், போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை வைத்து பயிற்சியும் அளித்தார். இந்த பயிற்சி சென்னையை அடுத்த செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. தினமும் 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் செய்ய விஜய் முடிவெடுத்து அதற்காக 3 இடங்களை தேர்வு செய்து அனுமதி கோரினார். ஆனால் அன்றைய தினம் கார்த்திகை தீபம் என்பதால் வேறு ஒரு நாளில் பிரச்சாரம் வைத்துக் கொள்ளுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள குன்னம் பகுதியில் ஜேப்பியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்கிறார்கள். காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்கேற்ப இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த கல்லூரி வளாகத்தில் போதுமான இருக்கைகளும் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற யாருக்கும் அனுமதி கிடையாது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு குழந்தைகளுடன் வந்த பெண்களை, புஸ்ஸி ஆனந்த் அன்பாக பேசி வெளியேற்றினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
-
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications