கன்னியாகுமரி: ஒரே நாளில் 100 மி.மீ. மழை பதிவு.. இன்றும் வெளுத்து வாங்கும்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்தது.
சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பெய்ததால் தலைநகரே வெள்ளக்காடானது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடசென்னை அருகே கரையை கடந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் மழை இல்லை. எங்காவது ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி
இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். ரயில் தண்டவாளங்களில் ஆற்றை போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

நிரம்பி வெளியேறும் நீர்
தொட்டி பாலத்தில் மழைநீர் நிரம்பி அது மேலிருந்து வெளியேறும் வரும் காட்சிகளும் நடந்துள்ளன. இந்த நிலையில் நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் முல்லையாற்றில் ஒருவர் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுவரை பேரிடர் மீட்பு குழுவினரும் போலீஸாரும் இணைந்து 755 குடும்பங்களை சேர்ந்த 2,267 பேரை மீட்டுள்ளனர். அவர்கள் 48 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

100.48 மி.மீ. மழை
ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில்- திருநெல்வேலி இடையே ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குழித்துறையில் நேற்றைய தினம் தாமிரபரணி ஆற்றில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 100.48 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பாதுகாப்பு இடம்
இந்த கனமழை இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. பேரிடர் மீட்பு படையினரும் போலீஸாரும் தீயணைப்பு துறையினர் என அனைத்து தரப்பினரும் தயாராக உள்ளனர். இந்த பேய மழைக்கு 29 ஆண்டுகளுக்கு பிறகு வீடுகளுக்குள் தண்ணீர் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications