"அழகிகளுடன் ஜாலி".. வசமாக சிக்கிட்டாரே.. பரிதாப ராஜேஷ்.. கடைசியில் பிரார்த்தனை எல்லாம் வீணா போச்சே
கன்னியாகுமரி வீடுகளில் திருடிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்
கன்னியாகுமரி: ஒரே நாளில் 2 விதமான திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் சிக்கி உள்ளனர்.. இவர்கள் இருவருமே வித்தியாசமான முறையில் கைதாகி உள்ளார்கள்..!
கன்னியாகுமரியில் சமீபகாலமாகவே தொடர் திருட்டுகள் நடந்து வருவதாக போலீசுக்கு புகார்கள் வந்துள்ளன.. அந்தவகையில், போலீசாரும், வழக்குகளை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை தேடி வந்தனர்.
முக்கியமாக, குளச்சல், தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இந்த திருட்டு நடந்து வந்துள்ளது.. அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நிறைய திருட்டு நடக்குமாம்..

சர்ச் + கிறிஸ்தவர்கள்
அந்த பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் என்பதால் ஞாயிறுகளில் சர்ச்சுக்கு சென்று விடுவார்கள்.. வீடுகளை பூட்டிக் கொண்டு சர்ச்க்கு போய்விடுவதால், திருடனுக்கு இது வசதியாக போய் உள்ளது.. அதனால் தேவாலயம் செல்லும் நபர்களின் வீடுகளை மட்டும் குறி வைத்து, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து செல்வது தொடர்கதையாக இருந்துள்ளது.. இதற்கு பிறகுதான் போலீஸார் இதற்காகவே ஒரு தனி டீம் இறக்கினார்கள்.. ஆனாலும் கொள்ளையர்களை பிடிப்பது சிரமமாக இருந்தது.. பல்வேறு சிக்கல்களும் எழுந்தன..

கிரி
பொதுவாக, எந்த குற்றம் நடந்தாலும், எப்பேர்ப்பட்ட கிரிமினலாக இருந்தாலும், ஏதாவது ஒரு தடயத்தை அங்கே விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.. இந்த சிறு தடயம்தான், அந்த மிகப்பெரிய குற்றத்தை கண்டுபிடிக்க போலீசுக்கு உதவியாக இருக்கும்.. ஆனால், இந்த திருடர்களோ, எந்த வீட்டில் திருடினாலும், எந்த தடயத்தையுமே விட்டு செல்லவில்லையாம்.. மிகவும் ஜாக்கிரதையாகவே திருடி சென்றதால், போலீசார் விழி பிதுங்கி நின்றனர்.

க்ளூ கிடைச்சாச்சு
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 3ம் தேதி குமாரபுரம் பகுதியை சேர்ந்த வாழைத்தார் வியாபாரி சோமன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 65 சவரன் நகை, இரண்டரை லட்ச ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துள்ளனர்... இதை கேள்விப்பட்டு அதிர்ந்து போன போலீசார், இந்த ஒரு திருட்டுக்காகவே 2 தனிப்படைகளை அமைத்தனர்.. கொள்ளை போன பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, ஒரே ஒரு க்ளூ பொதுவாக கிடைத்தது.. அதன்படி, கொள்ளை நடந்த எல்லா இடங்களிலும் வெள்ளை நிற ஆக்டிவா பைக்கில் ஹெல்மட் அணிந்து ஒருவர் வந்து செல்வது பதிவாகியிருந்தது...

"தனி ஒருவன்"
அப்போதுதான், சம்பந்தப்பட்ட திருட்டுக்களை செய்தது, பெரிய கும்பல் இல்லை, "தனி ஒருவன்" என்பது தெரியவந்தது.. மேக்காமண்டபம் பகுதியில் செக்போஸ்ட்டில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, அந்த ஒயிட் கலர் ஆக்டிவா பைக் தானாகவே வந்து நின்றது.. அந்த பைக்கை பார்த்ததுமே கோழி அமுக்குவது போல் போலீசார் அமுக்கிவிட்டனர்.. சம்பந்தப்பட்ட நபரையும் விசாரிக்க ஆரம்பித்தனர்.. அவர் பெயர் ஸ்டீபன்.. 36 வயதாகிறதாம்.. நெய்யூர் பகுதியை சேர்ந்தவர்.. இவர் ஒரு கொத்தனார்.. கட்டிட வேலை எங்கெல்லாம் நடக்கமோ, அங்கெல்லாம் திருடுவதுதான் இவரது வேலையாம்..

ரெட் லைட் ஏரியா
கன்னியாகுமரிதவிர, சிவகங்கை, திருப்பூர், திருச்சி, ஈரோடு, நாமக்கல், கேரளாவில் பத்தணம்திட்டா, சங்கணாசேரி, திருவல்லா போன்ற பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்து இருக்கிறார்.. அதுமட்டுமல்ல, கொள்ளையடிக்கும் பொருட்களை உடனே விற்று காசாக்கிவிடுவாராம்.. அதுமட்டுமல்ல, அந்த காசை எடுத்துக் கொண்டு, உடனே மும்பை ரெட் லைட் ஏரியாவுக்கு சென்றுவிடுவாராம்.. ஆட்டைய போட்ட பணத்தில் அழகிகளுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.

ராஜேஷ்ஷா
3 மாதங்களுக்கு முன்புதான், ஸ்டீபன் குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்தாராம்.. வெளியே வந்ததுமே குளச்சல், தக்கலை சுற்றுவட்டார பகுதியில் 6 வீடுகளில் கைவரிசை காட்டி, மும்பைக்கும் சென்றுவந்தது தெரியவந்துள்ளது. இதேபோல இன்னொரு திருடனும் வசமாக சிக்கி உள்ளார்.. இந்த திருடன் கொஞ்சம் வித்தியாசமானவர்.. அவர் பெயர் ராஜேஷ்.. இவர் கோயிலில் மட்டும்தான் திருடுவாராம்.. அப்படியே திருடினாலும், திருடுவதற்கு முன்பு அதே கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் சாமி நகைகளை கொள்ளையடிப்பாராம். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரூர் புத்தன் அங்காடி ஸ்ரீகுமார விலாசம் கோயில் உள்ளது... ராஜேஷ் இந்த கோயிலுக்குள் நுழைந்து, வழக்கம்போல், பய பக்தியுடன் கடவுளை கும்பிட்டு பிரார்த்தனை செய்திருக்கிறார்..

கருவறை
பிறகு, நேராக, கோயில் கருவறை பகுதிக்கு சென்று, அங்கேயும் கீழே விழுந்து கும்பிட்டுள்ளார்.. அதற்கு பிறகு, கருவறையில் வைத்திருந்த தங்க நகைகள், திருவாபரணம், தங்க கிரீடம் தங்கக்கூடு உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை களவாடி விட்டார்.. இவ்வளவும் செய்த ராஜேஷ், அங்கிருந்த சிசிடிவி காட்சியை கவனிக்காமல் விட்டுவிட்டார்போல.. திருட்டு நடந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ராஜேஷை போலீசார் சுற்றி வளைத்துவிட்டனர்... கடைசியில் ராஜேஷ் விழுந்து விழுந்து கும்பிட்டு, பிரார்த்தனை செய்தது வீணானதுதான் மிச்சம்..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications