மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலில் சாப்பாடு சரியில்லை.. மயங்கி விழுந்த மாணவிகள்
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வளாகத்தில் அமைந்துள்ள உணவகத்தில்
சாப்பாடு சாப்பிட்ட 6 மாணவிகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த 6 பேரும், மருத்துவ கல்லூரியில் ஆய்வக தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகள் ஆவர். இன்று காலை உணவு சாப்பிட்ட பிறகு இந்த சம்பவம் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வரும் இந்த கல்லூரியில் மருத்துவர்கள், செவிலியர்கள், ரத்த பரிசோதகர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று கல்லூரியில் ஆய்வக தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளில் சிலர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவர்களுக்கான உணவகத்தில் உணவு சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 6 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
இதனை பார்த்த சக மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் உணவு சாப்பிட்ட மாணவிகள் மயக்கம் அடைந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications