உதயநிதி தலைப்பாகை, நாமம் போடாமல் அய்யாவழி வைகுண்டர் பதியில் வழிபாடு- மன்னிப்பு கேட்ட நிர்வாகி!
கன்னியாகுமரி: திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் தரிசனம் செய்தது சர்ச்சையாகி உள்ளது.
அய்யா வழி என்பது தனித்துவமான சமய கோட்பாடு. இக்கோட்பாட்டை பல லட்சம் மக்கள் பின்பற்றுகின்றனர். சமய சடங்குகள், ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானதாக அய்யா வழி கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

சுவாமி தோப்பு
அய்யா வழியை வைகுண்டர் உருவாக்கினார். அவரது சமாதி அமைந்துள்ள இடம் பள்ளியறை எனப்படுகிறது. 19-ம் நூற்றாண்டின் மத்தியில் அய்யா வழி தனி ஒரு சமயமாக அங்கீகரிக்கப்பட்டது. அய்யா வழி திருத்தலம் கன்னியாகுமரி சுவாமி தோப்பு என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள வைகுண்டர் பள்ளியறையில் வழிபாடு நடத்தும் போது தலைப்பாகை கட்டுதல், நாமம் இடுதல் என சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதும் வழக்கம்.

உதயநிதி ஸ்டாலின்
அண்மையில் உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி சென்றிருந்தார் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.. அங்கு இல்லந்தோறும் இளைஞரணி என திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கைய தொடங்கி வைத்தார். பின்னர் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் சுவாமி தலைமை பதிக்கு சென்று அவர் வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து முட்டம் கடற்கரையில் உலக மீனவர் தின வெள்ளி விழா நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார்.

சுவாமி தோப்பில் உதயநிதி ஸ்டாலின்
வைகுண்டர் சுவாமி தலைமை பதிக்கு உதயநிதி சென்ற போது மேல்சட்டயை மட்டும் கழற்றி துண்டு அணிந்திருந்தார். அவருடன் வந்தவர்கள் மேல்சட்டை இல்லாமல் தலைப்பாகை மற்றும் திருநாமம் இட்டு வழிபாடு நடத்தினர். உதயநிதி மட்டும் தலைப்பாகை, திருநாமம் இடாமல் வழிபாடு நடத்தியதை சிலர் சர்ச்சையாக்கி வருகின்றனர். அய்யா வழி மதபோதகரான சந்திர சுவாமிகள் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அதிருப்தி கருத்தை வெளியிட்டிருந்தார்.

மன்னிப்பு கேட்ட நிர்வாகி
இதனைத் தொடர்ந்து சுவாமி தோப்பு தலைமை நிர்வாகி பால ஞனாதிபதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், அய்யா வைகுண்டர் காலடி தொழுது எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். நான் அழைக்கவில்லை. வருவதாக மேயர் தகவல் சொன்னார். நான் மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். சட்டையிடாமல் தலைப்பாகையுடன் வரவேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் ஏற்றுக் கொண்டேன். ஐந்து நபர்கள் தான் உள்ளே வருவார்கள் என்றார்கள். ஏற்றுக் கொண்டேன். நெருக்கடி தள்ளுமுள்ளு வகையற்றநிலையில் நடந்துவிட்டது. அய்யாவழியினரைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். அய்யா உண்டு என உதயநிதியின் பெயரைக் குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications