கத்தாரில் மீன் பிடி வேலை செய்து கன்னியாகுமரி காதலியை படிக்க வைத்து திருமணம் செய்தவருக்கு ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ராமன்துறை என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுஜின் எனபவர் கத்தார் நாட்டிற்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். அந்த வருமானத்தில் இளம் பெண் ஒருவரை இன்ஜினியரிங் படிக்க வைத்தாராம். ஆனால் அந்த பெண் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை இப்போது வேறு ஒருவருடன் சுற்றுவதாக புகார் அளித்துள்ளார். அந்த புகார் பற்றி பார்பேபோம்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ராமன்துறை என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜின். 35 வயதான இவர், முள்ளூர்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். சுஜின் மீனவர் ஆவார். இவர் தனது காதலியின் ஆசையை நிறைவேற்ற சுஜின் கத்தார் நாட்டில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தாராம்.

வெளிநாட்டில் இருந்தபடியே தனது காதலியை நல்ல கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க வைத்தாராம் சுஜின், அவருக்கு கல்விக் கட்டணம் கட்டுவதற்காக அவ்வபோது பணம் அனுப்பி வந்திருக்கிறார். இதற்கிடையே ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து 2023ஆம் ஆண்டு சுஜின் தனது காதலியை திருமணம் செய்துகொண்டாராம். ஆனால் காதலியின் அக்காவிற்கு திருமணம் ஆகாமல் இருந்ததால், தங்களது திருமணம் குறித்து வெளியே தெரிய வேண்டாம் என்றும், இருவரும் அவரவர் வீட்டிலேயே இருக்கலாம் என்றும் சுஜினிடம் அவரது காதலி கோரிக்கை வைத்தாராம்.
இதையடுத்து சுஜினும் திருமணமானதை மறைத்து மீண்டும் கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டாராம். ஆனால் அவரிடம் பணம் வாங்கி, கல்லூரி படிப்பை முடித்த காதலி, படிப்பை முடித்த பின்னர், பெங்களூருவில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்ததாம். இதையடுத்து சுஜினிடம் கூறிவிட்டு பெங்களூரில் காதலி வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போதும் பெங்களூருவில் தங்குவதற்காக ரூம் வாடகை மற்றும் கைச்செலவுகளுக்காக பலமுறை ஜிபே மற்றும் வங்கிக் கணக்குகள் மூலமாக சுஜினிடமிருந்து பணம் பெற்று வந்துள்ளாராம் காதலி.
இந்த சமயத்தில் காதலியின் அக்காவிற்கு திருமணம் முடிய, இரு வீட்டாரிடமும் ஒப்புதல் பெற்று இனிமேல் தனது மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என்ற ஆசையில் கத்தாரிலிருந்து ஊருக்கு வந்திருக்கிறார் சுஜின். ஆனால் அவரது காதலி தயங்கியதுடன், சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது காதலியின் பேச்சு மற்றும் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கவனித்த சுஜின் சுற்று வட்டாரத்தில் விசாரித்தாராம்.
அப்போதுதான் அவரது காதலி பெங்களூருவில் வேறு ஒரு ஆணுடன் பழகி வருவது சுஜினுக்கு தெரிய வந்திருக்கிறது. மேலும் அது சம்பந்தமான புகைப்படங்களும் அவருக்கு கிடைத்துள்ளதாம் . இதனைப் பார்த்து மனமுடைந்த சுஜின், காதலிக்கு அனுப்பிய பணத்தின் ஆவணங்கள், இருவரின் வாட்ஸ் ஆப் உரையாடல் நிகழ்ந்த ஸ்கிரீன் ஷார்ட்டுகள், தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்ட வீடியோ காட்சிகள், காதலி வேறு ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் புதுக்கடை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தனது மனைவி வேறு ஒருவருடன் பழனி வருவதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுபற்றி குழித்துறை நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications