கன்னியாகுமரியில் ஆசையாய் வீடு கட்டி குடியேறிய மக்களுக்கு ட்விஸ்ட்.. கடைசியில் பாதையே இல்லை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பிலாங்காலவிளை பகுதியில் பிளாட் போட்டு நிலம் விற்பனை செய்துள்ளனர். அங்கு சாலைக்கென போட்ட இடத்தை அரசுக்கு எழுதி கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் பத்து வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ள சகதி வழியாக நடந்து சென்று மக்கள் அல்லல்படுகிறார்கள். இந்நிலையில் தங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்துள்ள அவர்கள், வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வாசலில் பேனர் வைத்துள்ளனர். இவர்கள் எப்படி ஏமாந்தார்கள்.. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஒரு நிலத்தை விற்கும் போது, டிடிசிபி அல்லது உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி வாங்குவதற்குச் சாலை வசதி, பூங்கா, பொது பயன்பாட்டு இடம் என்று வரைபடத்தில் காட்ட வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், தமிழக அரசிடம் இப்படியான வசதிகளை காட்டி ஒப்புதல் பெற்ற பிறகு, அந்தச் சாலை இடங்களைப் பத்திரப் பதிவு செய்யாமல் அந்த நிலத்தை அப்படியே தனது பெயரிலேயே ரியல் எஸ்டேட் அதிபர்கள் வைத்துக்கொள்வார்கள். மக்கள் அந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய பிறகு, அந்த சாலை நிலத்தை ஏதேனும் குளறுபடி செய்து விற்க முயல்வார்கள்.. இப்படித்தான் கடையாலுமூடு பேரூராட்சியில் நடந்திருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Residents

லஞ்சம் செய்த வேலை

ஒரு லே-அவுட் முறையாக அரசுக்கு ஒப்படைக்கப்படாமல், அந்தப் பேரூராட்சியில் எப்படிப் பத்திரம் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் 'கவனிப்பால் (லஞ்சம்)', அந்த சாலை நிலத்தை அரசுக்கு ஒப்படைக்காமலேயே கட்டிட அனுமதி வழங்கக் காரணமாகி விட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. கடைசியில் பேரூராட்சி நிர்வாகம் அந்தப் பகுதியை முறையாகப் பராமரிக்காமல், 'இது தனியார் இடம், நாங்கள் எப்படிச் சாலை போட முடியும்?' என்று கைகழுவி விட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றி முழுமையாக பார்ப்போம்.

கடையாலுமூடு பேரூராட்சி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாக பிலாங்காலை பகுதி உள்ளது. இந்த பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை பத்து வருடங்களுக்கு முன் பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர். இந்த நிலத்தை அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பணம் கொடுத்து வாங்கி பேரூராட்சி அனுமதியுடன் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலத்தை விற்பனை செய்யும் போதே நில உரிமையாளர்கள் சாலைக்கென இடத்தை போட்டுவிட்டு அதனை அரசுக்கு எழுதி கொடுக்காமல் ஏமாற்றி இருந்து வந்துள்ளார்களாம்.

தண்ணீர் வசதி உள்ளது

இதனால் ஊர் மக்கள் அவர்கள் வீடு கட்டி இருக்கும் பகுதிக்கு, மின்சார கிடைக்க மின் கம்பங்கள் அமைத்து தர கேட்டபோது அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனையடுத்து ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் செலுத்தி மின்கம்பங்கள் அமைத்து மின்சாரம் பெற்றுள்ளனர். தொடர்ந்து குடிநீர் இன்றி பரிதவித்து வந்துள்ளனர். இதனையடுத்து பேரூராட்சி சார்பில் அம்ரூத் திட்டத்தின் மூலம் வீட்டு இணைப்பு கொடுத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துள்ளனர். இவை அனைத்தும் பெறப்பட்ட பின்னரும் முறையான சாலை வசதி கிடைக்கவில்லை.. மழை காலங்களில் சக்தி நிறைந்து நடந்து செல்ல முடியாமலும் வயதான முதியவர்கள் பலரும் கீழே விழுந்து எழும்பும் அவல நிலை உள்ளதாம்.

சாலை வசதி இல்லை

அதே போல் குண்டும் குழியுமாக காணப்படும் இந்த வழியாக பள்ளி செல்லும் இங்குள்ள மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் அவசர காலங்களில் நோய்வாய்ப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வருவது இல்லை என்றும் ஆட்டோ போன்ற வாகனங்களும் உள்ளே வர அச்சப்பட்டு மேலேயே நின்று திரும்பி செல்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாமலும் பரிதவித்து வரும் இப்பகுதி மக்கள் தங்களுக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல முறை கோரிக்கை வைத்து வருகிறார்கள.

தேர்தல் புறக்கணிப்பு

ஆனால் சாலை அமைக்க நிலம் இல்லாததால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி ஊரின் வாயிலில் பேனர் வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+