அரசியல் ஸ்டேட்மெண்ட்! திருவள்ளுவர் சிலை அமைக்க கன்னியாகுமரியை கருணாநிதி தேர்வு செய்தது ஏன் தெரியுமா?
கன்னியாகுமரி: பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் நிலையில் அருகிலேயே இருக்கும் மாபெரும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கவனம் பெற்றுள்ளது. இந்த சிலையை கன்னியாகுமரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்ததற்கு பின் மிகப்பெரிய அரசியல் ஸ்டேட்மெண்ட் உள்ளது.
1990 வரை கன்னியாகுமரியின் அடையாளாமாக இருந்தது விவேகானந்தர் மண்டபம்தான். 19 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானியும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் இரவும் பகலும் இங்கு தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது. இங்கே பாரத் மாதா அருள் அவருக்கு கிடைத்ததாக நம்பிக்கை உள்ளது.

இதன் காரணமாக இந்திய எல்லையின் அடையாளமாக விவேகானந்தர் மண்டபம் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் கன்னியாகுமரி எல்லையில் இந்திய பெருங்கடலில் திருவள்ளுவர் சிலையை முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைக்க முடிவு எடுத்தார். அவரின் இந்த முடிவிற்கு பின் மிகப்பெரிய அரசியல் ஸ்டேட்மெண்ட் உள்ளது.
ஸ்டேட்மென்ட் முடிவு; கருணாநிதி மூன்றாவது முறையாக பதவி ஏற்ற போதுதான் இந்த சிலை அமைக்கும் முடிவை எடுத்தார். 1989ல் ஆட்சிக்கு வந்ததும் செயலர் ராஜமாணிக்கமை அழைத்து திருவள்ளுவர் சிலை அமைப்பது தொடர்பாக முதல்வர் கருணாநிதி அப்போது பேசினார். இதற்கு பின் சிற்பி கணபதி ஸ்தபதியை அழைத்து.. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை கடலில் அமைக்க வேண்டும்.
இத்தனை காலம் தமிழ்நாடு கீழே இருக்கிறது. தமிழ்நாடுதான் இந்தியாவின் முடிவு என்கிறார்கள். அதை மாற்ற வேண்டும். குமரிதான் இந்தியாவின் தொடக்கம். தமிழ்நாடுதான் இந்தியாவின் தொடக்கம் என்ற நிலையை கொண்டு வர வேண்டும். இந்திய பெருங்கடலில் அடையாளமாக திருவள்ளுவர் இருக்க வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பிறப்பின் சமத்துவத்தை பேசிய திருவள்ளுவர் சிலையை அங்கே நிறுவ வேண்டும் என்று கூறினார்.
திருவள்ளுவர் எழுதிய 133 அதிகாரங்களின் அடையாளமாக 133 அடி உயரத்தில் சிலையை அமைக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இந்து - இந்துத்துவா கொள்கை கொண்டவராக விவேகானந்தரை சித்தரிக்கும் நிலையில் அவருக்கு என்று ஒரு மண்டபம் தெற்கில் இருக்கும் போது.. நம் புலவர் வள்ளுவன் சிலை இங்கே இருக்க வேண்டும். அது நம் கலாச்சாரத்தை உலகிற்கு காட்டுவதாக இருக்கும் என்று கருணாநிதி முடிவு எடுத்தார்.
அவரின் இந்த முடிவு மிகப்பெரிய அரசியல் ஸ்டேட்மென்ட்டாகவும் மாறியது. அதோடு குமரியின் அடையாளம் தமிழ் புலவன் வள்ளுவன் என்றும் மாறியது.
மோடி தியானம்: நேற்று லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ளார். நேற்று தமிழ்நாடு வந்த மோடி, குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய தொடங்கி உள்ளார். கடந்த முறை 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் கேதார் நாத் குகையில் மோடி தியானம் செய்தார்.
அதேபோல் இந்த முறை தியானம் செய்கிறார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்.. சேனல்களின் எல்லா கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து பிரச்சார்ம் முடிந்த பின்பும் கூட தேர்தலுக்கு முன்பாக மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளார். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் மோடி தியானம் செய்கிறார். இரண்டு நாட்களுக்கு அவர் தியானம் செய்ய உள்ளார்.
48 மணி ஏசி அறையில் அவர் விடாமல் தியானம் செய்வார். தூங்க, குளிக்க மட்டும் பிரேக் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை பிரதமர் மோடி இளநீர் மற்றும் ஜூஸ் மட்டும் குடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications