ரிதன்யாவை புதைச்ச ஈரமே காயலை.. குமரியை கலங்க வைத்த ஜெபிலா! 1.5 கோடி கொடுத்தும்.. எல்லாம் காசுக்காக?
கன்னியாகுமரி: திருப்பூரில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் ரிதன்யா திருமணமான சில நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கன்னியாகுமரியில் வரதட்சனை கொடுமை காரணமாக ஜெபிலா மேரி என்ற இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியில் இளம்பெண் ஜெபிலா மேரி என்பவர் தான் நேற்று கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே வரதட்சணை கேட்டு கொடுமை செய்து தங்கள் மகளை அடித்து கொலை செய்ததாக கூறி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் இருந்து பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பலதா. இவர் மேல்மிடாலம் பகுதியை சேர்ந்த நிதின் ராஜ் என்பவருக்கு, செவிலியர் ஆன தனது மகள் ஜெபிலா மேரியை ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். பத்தாண்டுகள் காதலித்து வந்த இளம் ஜோடிகளுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று இருந்தது.
இந்த நிலையில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு வரதட்சணையாக 7 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 50 சவரன் தங்க நகை, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை, இருசக்கர வாகனம், ஐம்பது லட்சம் ரூபாய்க்கு வீடு உட்பட சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஜெபிலா இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது பெண் உயிரிழந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அவர்கள் ஜெபிலா தூக்கிட்டு தற்கொலை செய்து தகவல் தெரிவித்து அதன் அடிப்படையில் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவரிடம் இருந்து 50 சவரன் நகைகளை பெண்ணின் கணவர் நித்தின் ராஜ் மற்றும் அவரது பெற்றோர் மரிய டேவிட் 54 , அமலோர்ப மேரி 46 உட்பட 6 பேர் அபகரித்து விட்டு பெண்ணை அடித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், பெண்ணின் உடலை வாங்க மறுத்து இன்று பெண்ணின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணின் கணவர் நிதின் ராஜ் மற்றும் அவரது இந்த தாய் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உயிரிழந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
Note: தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்..
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications