"அட தேன் அட".. விடுங்கடா, பாவமன்னிப்பு குடுத்தது தப்பாடா? குமரி பாதிரியாருக்கு ரசிகர் மன்றம்.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

குமரி: பாதிரியாராக பணியாற்றிய பெனடிக்கிற்கு ரசிகர் மன்றமே உருவாகிவிட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அவரை வைத்து கலாய்த்து, குமரி இளைஞர்கள் சிலர் கிண்டலாக பேனர்களை வைத்துள்ளார்கள்.. இதுதான் ஹாட் நியூஸ் ஆக இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ... 29 வயதாகிறது.. நன்றாக படித்தவர்.. சென்னையில் தத்துவயியல், எம்பிஏ., எம்ஏ ஆங்கிலம் படித்திருக்கிறார்.

இதைதவிர, இறையியல் தொடர்பான படிப்புகளை கிட்டத்தட்ட 7 வருடங்கள் படித்துள்ளார்.. ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

 அரைநிர்வாணம்

அரைநிர்வாணம்

பாதிரியாராக பணியாற்றுவதற்கு முன்பிருந்தே, பெண்களிடம் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அந்தவகையில், சென்னையில் படிக்கும்போது ஒரு பெண்ணை 4 வருடங்களாக காதலித்துள்ளார்... அதே பெண்ணுக்கு கல்யாணமும் செய்து வைத்துள்ளார்... ஆனால், கல்யாணத்துக்கு பின்னரும் அந்த பெண்ணுடன் பெனடிக்ட் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார்... இவர்கள் இருவரும் அரை நிர்வாணத்தில் பேசிக்கொண்ட வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட்டுகள் முதன்முதலில் இணையத்தில் வெளியாகியபோதுதான், பெனடிக்கின் லீலைகள் ஒவ்வொன்றாக வெளியே தெரிய ஆரம்பித்தது.. அதிலும், ஒரே வீட்டிற்குள் காண்டிராக்டரின் மனைவி, மகள், மருமகள் என ஒரே வீட்டில் 3 பேருடன் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் உறவு வைத்திருந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.

 சர்ச்சுக்குள்

சர்ச்சுக்குள்

கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள், அவர்கள் வீட்டு பெண்கள் என 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. "சர்ச்சில் மட்டும்தான் நான் பாதிரியார், சர்ச்சுக்கு வெளியே நான் காமன்மேன்" என்று பெனடிக் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் சொல்லி வந்த நிலையில், அந்த சர்ச்சுக்குள்ளேயே தன்னுடைய சேட்டையை அரங்கேற்றியும் வந்துள்ளார்.. அதற்கான வாட்ஸ்அப் மெசேஜ்களும் லீக் ஆகி அதிர செய்து வருகிறது.. அந்தவகையில், அப்பெண்களுடன் சேட்டிங் செய்த எல்லா மெசேஜ்களுமே ஆபாசமாகவும் விரசமாகவும் உள்ளது.

 குமட்டும் ஆபாசம்

குமட்டும் ஆபாசம்

அதில் ஒரு மெசேஜில், இளம்பெண் ஒருவர் பாதிரியாரை கேட்கிறார், "மாஸ்ல கம்யூனியன் கொடுத்தப்போ, ஏதோ நீங்க யோசிச்ச மாதிரி இருந்துச்சு.. ஏன்? ஒரு செகண்ட் ஏதோ ஃப்ரீஸ் ஆகி நின்ன மாதிரி தெரிஞ்சதே" என்று அந்த பெண் கேட்கிறார்.. அதற்கு பாதிரியார், "சும்மா, உன்னை உடம்பை பார்த்தேன்" என்கிறார்.. அதற்கு அந்த பெண், "நான் தான் ஷால் போட்டிருந்தேனே" என்று சொல்ல, "இருந்தாலும், தெரியும்ல" என்று ஆபாசமாக அந்த சேட்டிங் நீள்கிறது.. பாதிரியாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.. பாதிரியாருடன் தொடர்பில் இருந்த பெண்களிடமும் விசாரணையை துவக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..

 ஆபாச லேப்டாப்

ஆபாச லேப்டாப்

முதலில் கன்னியாகுமரி சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார், அங்கு தமக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்ததையடுத்து, அவர் இப்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார்..பாதிரியாரின் ஒரு லேப்டாப் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், இன்னொரு லேப்டாப்புடன் மாயமானவருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. அந்த லேப்டாப் கிடைத்தால்தான், பாதிரியார் குறித்த முழு விவரமும் தெரியவரும் என்கிறார்கள்.. இந்நிலையில், பாதிரியாரை வைத்து, சில மீம்ஸ்களை இளைஞர்கள் தயாரித்துள்ளனர்.. அதாவது பாதிரியாரின் போட்டோவை பயன்படுத்தி குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர், சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

 தேன் அட

தேன் அட

இதைவிட ஒருபடிமேலே போய், திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாதிரியார் பெனடிக்ட் பெயரில் ரசிகர் மன்றத்தையே துவக்கி விட்டார்கள்.. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு திருமண வாழ்த்து பேனர் வைத்துள்ளார்கள்.. நடிகர்கள் வடிவேலு, சந்தானம் பட காமெடிகள் அடங்கிய அந்த பேனரை, கல்யாண வீட்டின் முன்பு வைத்திருக்கிறார்கள்.. அதாவது, பாதிரியாரை வைத்து, வடிவேலு, சந்தானம் பட டயலாக்குகளை கிண்டலடித்துள்ளார்கள்.. "அட தேன் அட" என்றும், "என்ன விடுங்கடா நான் பாதிரியா போறேன்..டா" என்றும் அதில் டயலாக்குகள் உள்ளன. "ஊருல 10, 15 லவ்வர் வச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். நான் பாவமன்னிப்பு குடுத்தது தப்பா டா.." என்று இன்னொரு டயாக் அந்த பேனரில் பளிச்சிடுகிறது.

 நித்தி ஸ்மைல்

நித்தி ஸ்மைல்

கல்யாண வீட்டிற்கு வரும் அனைவருமே, இந்த பேனரை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே கடந்து செல்கிறார்கள்.. இப்படித்தான், 3 வருடங்களுக்கு முன்பு திருச்சி லால்குடியில் ஒரு கல்யாணம் நடந்தது.. அந்த வீட்டின்முன்பு வைக்கப்பட்டிருந்த பேனரில் நித்தியானந்தா இடம்பெற்றிருந்தார்.. அப்போது நித்தியானந்தாவின் "நோ சூடு, நோ சொரணை டயலாக்" ரொம்பவே ஃபேமஸ் ஆகி கொண்டிருந்த நேரம் என்பதால், நித்தி படத்தை பெரிதாக வைத்திருந்தார்கள்.. உடம்பெல்லாம் நகையுடன் காணப்பட்டார் நித்தி.. பக்கத்துலயே பளிச்சென அந்த வாசகம்.. 'நோ சூடு நோ சொரணை'!!!

 நோ சூடு நோ சொரணை

நோ சூடு நோ சொரணை

இதுகுறித்து, பேனர் வைத்த அந்த நண்பர்களே அப்போது ஒரு வித்தியாசமான விளக்கமும் சொல்லிஇருந்தார்கள்.. "நித்தியானந்தா வித்தியாசமா இருக்கிறார்.. அவர் பேச்சு வித்தியாசமாக இருக்கு.. அவரை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எதை பத்தியும் கவலைப்படாதவர்.. ஜாலியா இருக்கார்.. அவர் கொள்கை எங்களுக்கு பிடிச்சிருக்கு.. என்ன தோணுதோ அதைதான் பேசுவாரு.. முக்கியமா "நோ சூடு, நோ சொரணை"ன்னு சொன்னாரு பாருங்க.. அங்கே நிக்கிறார் மனுஷன்.. நாங்களும் அப்படித்தான்.. எங்களை யார் என்ன திட்டினாலும்சரி, கண்டுக்கவே மாட்டோம்.. காதுலயும் போட்டுக்க மாட்டோம்.. அந்த கைலாசா எங்கே இருக்கேன்னு தெரியல.. தெரிந்தால் நாங்களும் கிளம்பிடுவோம்.. அப்படி ஒரு நாடு இருக்குன்னா, அதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த போஸ்டர் அடித்தோம்" என்று கூறியிருந்தார்கள்.

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

பொதுவாக மணமக்களை வாழ்த்தி பேனர்களை வைக்கும்போது, அதில் உறவினர்கள், அல்லது நண்பர்கள் போட்டோக்கள், பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.. ஒருவேளை, கட்சி சம்பந்தப்பட்டவர் வீட்டு திருமணம் என்றால் கட்சி தலைவர்கள், போட்டோக்களும், அல்லது நடிகர், நடிகைகள் போட்டோக்களும் பேனரில் இடம்பெற்றிருக்கும். ஆனால், இப்போதெல்லாம் நிலைமையே தலைகீழாகிவிட்டது.. நித்தி முதல் பெனடிக்வரை சாமியார்களும் பேனரில் காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த பேனர்கள்தான், இணையத்தில் இப்போ டிரெண்டாங்காம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+