பண்ணை வீட்டில் "படுக்கை பகிர்வு" + ஜாயிண்ட் விருந்து.. இவரும் ஒரு பெண்ணா.. இளைஞரை தட்டிதூக்கிய போலீஸ்
குளச்சல் பங்களாவின் மொட்டை மாடியில் இளம்பெண்ணை தாக்கிய முன்னாள் காதலன் கைதானார்
கன்னியாகுமரி: மொட்டை மாடியில் நடந்த மதுவிருந்தில், இளம்பெண்ணை, மரக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிய முன்னாள் காதலனை குளச்சல் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது சுல்தான் கடை பகுதி.. இங்கு வசித்து வந்த அஸ்வின் என்பவர், ரம்யா என்ற பெண்ணை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்தார்.
குளச்சல் பகுதியை சேர்ந்த ரம்யாவும், அஸ்வினும் 6 வருடமாக பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.. பிறகு, ரம்யா கல்லூரிக்கு சென்றதும் அவரது, கேரக்டர் முழுமையாக மாறிவிட்டது..

பண்ணை வீடு
நிறைய ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றினார்.. கஞ்சா அடிக்க ஆரம்பித்தார்.. மதுவிருந்து நடத்தி, பல ஆண்களிடம் தவறான உறவு வைத்து வந்துள்ளார்.. இதை அஸ்வின் தட்டிக் கேட்ட நிலையில், ரம்யா அந்த பேச்சை காதில் வாங்கவில்லை.. இந்த சமயத்தில்தான், ரம்யா தன் பிறந்தநாளுக்கு, நண்பர்களுக்கு பார்ட்டி தருவதாக, அஸ்வினுக்கு தகவல் கிடைக்கவும், அங்கு சென்றுள்ளார். ரம்யா சித்தப்பாவின், பண்ணை வீட்டில் இந்த "ஜாயின்ட்" பார்ட்டி நடந்துள்ளது..

பங்களா
அங்கு சென்று பார்த்தால், ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என அனைவருமே அரைகுறை ஆடையில், மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்துள்ளனர்.. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அஸ்வின் ரம்யாவை அங்கேயே மரக்கட்டையால் தாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டார். இதற்கு பிறகு, ரம்யாவின் பெற்றோர் போலீசில் சொல்லவும், பர்த்டே பார்ட்டி நடந்த சம்பந்தப்பட்ட பங்களாவின் மொட்டை மாடிக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அந்த பண்ணை வீட்டில் கிழித்து வீசப்பட்ட டிரஸ்கள், சிகரெட் துண்டுகள், மது பாட்டில்கள், ஸ்நேக்ஸ், ஆணுறைகள், என சிதறி கிடந்துள்ளதை கண்டு அதிர்ந்துள்ளனர்..

ஆணுறைகள்
வீட்டிற்குள்ளும், மொட்டை மாடியிலும் நிறைய மதுபாடில்கள், ஆணுறைகள் இருந்திருக்கின்றன.. தண்ணி அடிக்க வேண்டும், கஞ்சா பிடிக்க வேண்டும், ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கு வேண்டும் என்பதற்காகவே அந்த பங்களாவை பயன்படுத்தி வந்திருக்கிறாராம் ரம்யா. அந்த பங்களாவுக்கு, பெண் தோழிகளையும் ஆசைகாட்டி வரவழைத்து, ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கி உள்ளார் ரம்யா. இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் ஆடியோ கடந்த 2 தினங்களுக்கு முன்பு லீக் ஆகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஜாயிண்ட் விருந்து
"அம்மா, அன்னைக்கு என்ன நடந்ததுன்னா, எனக்கு கால் பண்ணி கூப்பிட்டாங்கம்மா.. செவ்வாய்க்கிழமை நைட் 7 மணிக்கு போன் பண்ணிட்டே இருந்தாங்க.. மது விருந்துக்குதான் என்னை கூப்பிடுகிறார்கள் என்று எனக்கு தெரியும்... அதனால், வரமாட்டேன் என்று முதலில் சொன்னேன்.. அதுக்கப்பறம்தான் கட்டாயப்படுத்தி கூப்பிடவும் போய்விட்டேன்.. ஒரே ஒருமுறை தப்பு செஞ்சுட்டேன்..,,இனிமேல் அந்த தவறை செய்யக்கூடாது என்பதற்காகத்தான், அவங்க எனக்கு தொடர்ந்து கால் பண்ணியும் அந்த போனை எடுக்கவே இல்லை.. என் வீட்டில் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.ம்மா.." என்று கெஞ்சி அழுதார்.

கிறிஸ்டி
இதற்கிடையில் பங்களாவுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை தாக்கிய அவரது முன்னாள் காதலனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அவர் தலை மறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் காதலரான அஸ்வின் அபினேஷை குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, பார்வதிபுரத்தில் கைது செய்தார்.. அஸ்வினுக்கு 24 வயதாகிறது.. அவரை குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. அவரை இனி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.

அசிங்கம்
முன்னதாக, தன் மகனை கைது செய்தால், சம்பந்தப்பட்ட பெண் மற்றும் பாதிக்கப்பட்ட தோழிகளின் விவரங்களை வெளியிட போவதாக, அஸ்வினின் அம்மா கூறி வருகிறார்.. ரம்யா வீட்டு தரப்பில் புகார்களை என் பையன் மேல் தந்தால், நானும் என்கிட்ட இருக்கிற ஆதாரங்களை வெளியே விடுவேன்.. இதனால் அவங்க பொண்ணுக்குதான் அசிங்கம்.." என்று போலீசாரிடம் அஸ்வின் அம்மா பேசிய ஆடியோவும் லீக் ஆகியிருந்த நிலையில், இப்போது அஸ்வின் கைதாகி உள்ளார்.

மதபோதகர்
இனி அடுத்தடுத்த திருப்பங்கள் இந்த வழக்கில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. 4 நாட்களுக்கு முன்பு, ரம்யா மற்றும் மதபோதகரான அவரது அப்பாவிடம் சிபிசிஐடி போலீசார் 2 மணி நேரம் விசாரித்துள்ளனர்.. சோஷியல் மீடியாவில் பரவி வரும் தகவல்கள் எல்லாமே பொய் என்று இருவரும் சொன்னார்களாம். கேக் வெட்டி கொண்டாடப்பட்ட பார்ட்டியை, யாரோ இப்படி வேண்டுமென்றே திசை திருப்புகிறார்கள், எந்த தவறும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். உடனே சில வீடியோ ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸ் தரப்பில் காட்டியிருக்கிறார்கள்.. அந்த வீடியோவை பார்த்துவிட்டு, அப்பாவும், மகளும் எந்த பதிலுமே சொல்லவில்லையாம். அப்படியானால், இந்த வீடியோ குறித்து அஸ்வினிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications