"திமுக" எம்.பி. ஹோட்டலில் ரஜினிகாந்துடன் "பாஜக" மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நடிகர் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் கன்னியாகுமரியில் உள்ள திமுக எம்பிக்கு சொந்தமான ஹோட்டலில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் தாம் நடிக்கும் 170வது படத்தின் படப்பிடிப்புக்காக கன்னியாகுமரியில் தங்கி உள்ளார். காவிரி பிரச்சனையில் நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்காத காரணத்தால் அவரை கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர்.

 BJP leader Pon.Radhakrishnan meets Actor Rajinikanth

ஆனாலும் மாவட்ட நிர்வாகம் காங்கிரஸ் கட்சியினர் மனுவை நிராகரித்தது. மேலும் ரஜினிகாந்தை சந்திக்க ஒவ்வொரு நாளும் அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் முன்பாக ரசிகர்கள் பட்டாளம் திரண்டு வருகிறது.

படப்பிடிப்பு செல்லும் ரஜினிகாந்த், ரசிகர்களை தவிர்க்காமல் காரில் இருந்த படியே கை கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஒரு சிலர் ரசிகர்கள் வம்படியாக செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நேற்று முன் தினம் பாஜக மூத்த தலைவரான முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்றார். அங்கு நடிகர் ரஜினிகாந்துக்கு சால்வை அணிவித்து உரையாடினார் பொன். ராதாகிருஷ்ணன்.

 BJP leader Pon.Radhakrishnan meets Actor Rajinikanth

பின்னர் இந்த சந்திப்பு தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரிக்கு சினிமா படப்பிடிப்புக்காக வந்திருக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் @rajinikanth
ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது என அப்போது எடுக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்துள்ளார்.

கன்னியாகுமரியில் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் ஹோட்டல், திமுக எம்பி ஒருவருக்கு சொந்தமானது. திமுக எம்பி ஹோட்டலில் பாஜக பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்தை சந்தித்தது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+