கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் காங்கிரஸ் பெண் நிர்வாகி வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்காக வீட்டை ஜப்தி செய்வதற்காக சென்ற கோர்ட்டு ஊழியரை காங்கிரஸ் பெண் பிரமுகர், அவரது கணவர் ஆகியோர் விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அந்த தம்பதி மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்படுவது வழக்கமான நடைமுறை தான். இது எப்படி நடக்கிறது. ஒரு வங்கி, கடன் வாங்கியவர் தவணையைச் செலுத்தாதபோது, SARFAESI Act (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002) என்ற சட்டத்தின் கீழ் மேற்கொள்ளும்.

முதலில் கடன் தவணை நிலுவையில் இருக்கும்போது, வங்கி முதலில் தொலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தொடர்புகொள்ளும். இதைத் தாண்டி தாமதமாகும் போது, 'நோட்டீஸ்' அனுப்பத் தொடங்கும். கடன் கணக்கு 'வாராக்கடன்' (NPA - Non-Performing Asset) என்று வகைப்படுத்தப்பட்ட பிறகு, வங்கி சட்டப்பூர்வமாக இந்த நோட்டீஸை அனுப்பும். இதில், கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையை எத்தனை நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவாக, 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
இந்த நோட்டீஸ் கிடைத்த 60 நாட்களுக்குள், கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையைச் செலுத்தலாம். அல்லது வங்கியின் கணக்கீட்டில் ஏதேனும் தவறு இருந்தால், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து வங்கிக்கு பதில் கடிதம் அனுப்பலாம். (வங்கி இதைப் பரிசீலித்து 15 நாட்களுக்குள் பதில் சொல்ல வேண்டும்).
இறுதியாக கடன் வாங்கியவர் தொகையைச் செலுத்தத் தவறினால், வங்கியின் அதிகாரி சொத்தின் மீது 'சீல்' வைப்பார். அந்தச் சொத்தின் வருமானம் அல்லது அதைக் கையாளும் அதிகாரத்தை வங்கி எடுத்துக்கொள்ளும்.
சொத்து கையகப்படுத்தப்பட்ட பிறகு, வங்கி அந்தச் சொத்தை விற்றுத் தன் நிலுவைத் தொகையை மீட்கும். இதற்கு முன்பாக, பொது ஏலம் குறித்த அறிவிப்பை நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை . கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு, கண்ணன்கரைவிளை பகுதியை சேர்ந்த 58 வயதாகும் ரசல்ராஜ் வசித்து வருகிறார். இவரது மனைவி அனிதா (53). இவர் காங்கிரஸ் கட்சியின் முன்சிறை ஒன்றிய மகளிர் அணி தலைவராக இருக்கிறார். தம்பதி இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் வங்கி கிளையில் தங்கள் வீட்டுடன் சேர்ந்த நிலத்தை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் வாங்கி தங்களுக்கு தெரிந்த நபரான ரகுதாஸ் என்பவருக்கு கொடுத்தனர்.
ஆனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் சீப் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ரசல்ராஜின் வீட்டை ஜப்தி செய்து வங்கி அதிகாரியிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட நீதிமன்ற காவலாளி ஒருவர் சம்பவத்தன்று கண்ணன்கரைவிளைக்கு சென்று ரசல்ராஜின் வீட்டை பூட்டி சீல் வைத்தார்.
- என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா?
- Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்!
- ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார்
- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு
- பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு
இதில் ஆத்திரம் அடைந்த ரசல் ராஜும், அவரது மனைவி அனிதாவும் சேர்ந்து அவரை விரட்டியடித்து கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து கடன் தந்த குறிப்பிட்ட வங்கி கிளையின் மேலாளர் பாஸ்கர் (46) புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தம்பதியர் மீது புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் புதுக்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அய்யோ.. அக்கவுண்டில் அநாமத்தாக வந்த 10 கோடி! ஒரே நொடியில் கோடீஸ்வரியான பெண்! உடனடியாக எடுத்த முடிவு -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
அசல் உயிலை தொலைத்த கோவை வங்கி.. கடனை தந்தும் கண்ணீர் வடித்த விவசாயி! ₹13 லட்சம் கோர்ட் தந்த தீர்ப்பு -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா?













Click it and Unblock the Notifications